இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு விட்டு தப்பிக்க முயன்ற ரஷியாவில் உள்ள
சிசன்ஸ் பகுதியை பூர்வீகமாக கொண்டு பிரான்சில் வசித்து வரும் 18 வயது
இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியர் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்ட
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான், இந்த தாக்குதல் ‘இஸ்லாமிய
பயங்கரவாத தாக்குதல்’ என கூறினார். மேலும், ’ஆசிரியர்களுக்கு பிரான்ஸ்
துணைநின்று பாதுகாக்கும்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டியதால்
தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ்
ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார்.
அதன் பின் பேசிய இம்மானுவேல், ‘ பிரான்ஸ் நாடு அதன் சுதந்திரத்தை
கைவிடாது. கேலிச்சித்திரங்கள் (நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள்)
வெளியிடுவதை கைவிடப்போவதில்லை. இஸ்லாமிய மதவாதிகளுக்கு நமது எதிர்காலம்
வேண்டும் என்பதால் சாமுவேல் கொல்லப்பட்டார். அவர்களுக்கு நமது எதிர்காலம்
ஒருபோதும் கிடைக்காது’ என தெரிவித்தார்.
இம்மானுவேல் மெக்ரானின் கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்
தெரிவித்துள்ளன. இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில்,
‘மெக்ரான் மனநல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என கூறி சர்ச்சையை
ஏற்படுத்தினார்.
ஏற்கனவே, கீரிஸ்-துருக்கி கடல்பரப்பு விவகாரம், அர்மீனியா-அசர்பைஜான்
விவகாரத்தில் துருக்கி-பிரான்ஸ் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இதனால், எர்டோகனின் கருத்தையடுத்து துருக்கியில் உள்ள தனது தூதரை
பிரான்ஸ் திரும்பப்பெற்றுக்கொண்டது. பிரான்ஸ் அதிபர் மீதான துருக்கி அதிபர்
எட்ரோகனின் கருத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இம்மானுவேலின் கருத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபரின் கருத்து ‘இஸ்லாம் மீதான
தாக்குதல்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் பிரான்ஸ் அதிபரின்
கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இஸ்லாமிய நாடுகளில்
பிரான்ஸ் நாட்டின் பொருட்களை புறக்கணிக்கும் வகையில் சமூக வலைதளங்களில்
கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக, நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை 2015 ஆம் ஆண்டு
பிரான்ஸ் நாட்டில் உள்ள சார்லி ஹேப்டோ என்ற பத்திரிக்கை வெளியிட்டது.
இதையடுத்து, அந்த பத்திரிக்கை கட்டிட வளாகத்திற்கு வெளியே கத்திக்குத்து
தாக்குதல் நடைபெற்றது. அந்த கொடூர தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆசிரியர் சாமுவேல் தலைதுண்டித்து கொல்லப்பட்ட விவகாரத்தில்
பிரான்ஸ் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக