வெள்ளி, 9 அக்டோபர், 2020

‘இரண்டாம் குத்து’ இயக்குநரை கைது செய்ய வேண்டும்.. போலீசில் புகார்! இவ்ளோ ஆபாசமாவா படம் எடுப்ப?

tamil.filmibeat.com சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. பெண்களை படு செக்ஸியாக காட்டியது மட்டுமல்லாமல், 'ஆண் குறி' காட்சியையும் காட்டியது தான் அந்த படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிய காரணமாகி உள்ளது

இந்நிலையில், தற்போது அந்த படத்தின் இயக்குநரை கைது செய்ய வேண்டும் என கட்சி ஒன்றின் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.    சர்ச்சையை கிளப்பிய போஸ்டர் ஆளுயர வாழைப் பழத்தை அந்த இடத்தில் பிடித்துக் கொண்டு, ஆபாசமாக இயக்குநர் சந்தோஷ் மற்றும் பிக் பாஸ் டேனி கொடுத்த போஸ் உடன் உருவான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கெளதம் கார்த்திக் வெளியிட்டு இருந்தார். போஸ்டர் வெளியான அடுத்த சில நொடிகளிலேயே ஏகப்பட்ட பேர் அந்த போஸ்டரை பார்த்து கண்டபடி திட்டி விளாசித் தள்ளினர். ஆர்யா வெளியிட்ட ஆபாச டீசர் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணதுக்கே கெளதம் கார்த்திக்கை தமிழ் சினிமா ரசிகர்கள் திட்டித் தீர்ந்த நிலையில், ஹாட்டஸ்ட் டீசர் என்ற பெயரில் நடிகர் ஆர்யா இரண்டாம் குத்து படத்தின் அந்த படு ஆபாசமான டீசரை வெளியிட்டு பெயரை கெடுத்துக் கொண்டார். 

அடல்ட் படங்கள் என்றாலும், ஒரு எல்லை இருக்கும் என பார்த்தால், அந்த எல்லையை டீசரிலேயே மீறியதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.-விளாசிய பாரதிராஜா

 "இரண்டாம் குத்து" படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?" என பாரதிராஜா விளாசி இருந்தார். 

பாரதிராஜாவை விமர்சித்த இயக்குநர் பாரதிராஜாவை விமர்சித்த இயக்குநர் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, கமல்ஹாசனை வைத்து டிக் டிக் டிக் படம் எடுக்கும் போது உங்கள் கண்கள் கூசவில்லையா என இயக்குநரும் இரண்டாம் குத்து படத்தின் ஹீரோவுமான சந்தோஷ் பாராதிராஜவை விமர்சிக்க தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷை திட்டித் தீர்க்க ஆரம்பித்து விட்டனர்.

 இந்நிலையில், அதிக ஆபாசமுள்ள இரண்டாம் குத்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் மற்றும் அந்த படத்தின் நடிகர்களை கைது செய்ய வேண்டும் என பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. புகாரின் அடிப்படையில் இரண்டாம் குத்து இயக்குநர் கைது செய்ப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்து இருக்கிறது.

சமூகம் கெட்டுப் போகும் சமூகம் கெட்டுப் போகும் ஹாலிவுட்டுக்கு நிகராக இங்கேயும் நிர்வாணக் காட்சிகளை படங்களில் புகுத்தத் தொடங்கினால், தமிழ் சமூகம் கெட்டுப் போகும் என்றும், ஏற்கனவே நாட்டில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் இது போன்ற படங்களை ஒடிடி தளத்தில் கூட வெளியிடக் கூடாது போன்ற எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக