அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை
thinathanthi :சென்னை,
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைக்கண்ணு இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
sathiyam.tv :தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மூச்சு திணறல் காரணமாக,
கடந்த 13-ஆம் தேதி அன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு
அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அமைச்சருக்கு பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக
கூறப்பட்டுள்ளது. மேலும், கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது என்றும்,
நுரையீரலில் 90 சதவீத அளவிற்கு பெருற்தொற்று பரவியுள்ளது என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெண்டிலேட்டர், எக்மோ கருவி உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை
அளிக்கப்படுகிறது என்றும், சிறப்பு மருத்துவ நிபுணர்களின் தொடர்
கண்காணிப்பில் அமைச்சர் இருந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமைச்சரின் உடல்நலம் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில்
சந்தித்து விசாரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக