வியாழன், 15 அக்டோபர், 2020

தனிஷ்க் நகை விளம்பரம் காவிக்கும்பலின் மிரட்டல்

Diwa : · இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா நிறுவனம் தன்னுடைய தனிஷ்க் நகைக்கான விளம்பரத்தை காவிக்கும்பலின் மிரட்டலால் திரும்ப பெற உள்ளது.அப்படி என்ன தவறு அந்த விளம்பரத்தில்? இஸ்லாமிய வீட்டிற்கு மருமகளாக சென்ற பெண்ணின் வளைகாப்பு நிகழ்ச்சியை அந்த இரு குடும்பத்தினரும் சேர்ந்து நடத்துவதுதான் விளம்பரத்தின் கருப்பொருள். மதவெறி பிடித்த கும்பலுக்கு இது ஒன்று போதாதா? மக்கள் ஒற்றுமையாய் இருந்துவிட்டால் கலவர கும்பலின் பிழைப்பில் மண் விழுந்து விடாதா? இது லவ் ஜிஹாதை ஆதரிக்கிறது என்று கலவரம் செய்யும் முஸ்தீபுகளில் இறங்க ஆரம்பித்தது.
விபரீதத்தை உணர்ந்த டாடா குழுமம் விளம்பரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.எவ்வளவு கேடு கெட்ட நிலைக்கு இந்தியாவை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.தொடர்ந்து பொய் பிரச்சாரங்களால் மக்கள் மனதில் நஞ்சை விதைத்து அதை அறுவடை செய்துதான் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள்.
ஆனாலும் இன்னும் வெறி அடங்கவில்லை.
ஆட்சியை பிடிக்க தேவைப்பட்டது போலவே இந்த கேடுகெட்ட கழிசடை ஆட்சியின் தோல்விகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவும் அதே வெறுப்பரசியல் நிரந்தர தேவையாயிக்கிறது.
இதோ பொருளாதாரம் நக்கிக்கொண்டு போய் பங்களாதேஷ் நம்மை பார்த்து சிரிக்கும் நிலைக்கு வந்து விட்டது.ஆனாலும் என்ன கோவணத்தை உருவி ஓட விட்டாலும் சங்கிகள் உரக்க சொல்வார்கள்
"பாரத் மாத்தாக்கி ஜே"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக