வெள்ளி, 16 அக்டோபர், 2020
கவுதம் சிகாமணியின் ரூ8.60 கோடி சொத்துக்கள் முடக்கம்.. கள்ளக்குறிச்சி திமுக எம்.பி
tamil.oneindia.com : சென்னை: கள்ளக்குறிச்சி திமுக எம்.பி கவுதம் சிகாமணியின் ரூ8.60 கோடி
சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி திமுக எம்பி கவுதம்
சிகாமணியின் ரூ.8.60 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளது, அமலாக்கத்துறை எம்பி கவுதம் சிகாமணி திமுகவின் மூத்த நிர்வாகியான பொன்முடியின் மகன் ஆவார்.
ரிசர்வ் விதிகளை மீறி முதலீடு செய்த புகாரில் கவுதம சிகாமணி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
2008ம் ஆண்டு, கவுதம் சிகாமணி, ரூ.41,57,225 மதிப்புள்ள முதலீடுகளை
வெளிநாட்டில் மேற்கொண்டு 2,45,000 பங்குகளை, ஜகார்த்தாவின், பிடி எக்செல்
மெகின்டோ நிறுவனத்திடம் வாங்கியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின்
யுனிவர்சல் பிசினஸ் வென்சர்ஸ் நிறுவனத்தில் ரூ.2286924 மதிப்புள்ள பங்குகளை
பெற்றுள்ளார். இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி பெறவில்லை. இவ்வாறு
அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக