திங்கள், 26 அக்டோபர், 2020

ஆ. ராசா பிறந்த ( 57 ) நாள்! சோதனைகளை சாதனைகளாக மாற்றிய திராவிட தீரர்

 ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையை அவரின் அரசியல் கோணத்தில் இருந்துதான் பார்க்கவேண்டும் என்ற நியதி கிடையாது . 

பல அரசியல்வாதிகளுக்கு அரசியலுக்கு அப்பால் பல கோணங்களும்  உண்டு . அண்ணா கலைஞர் போன்றவர்கள் கலை  இலக்கியம் நாடகம் சினிமா போன்ற பலதுறைகளில்  பெரும் ஆளுமை உள்ளவர்கள்     எம்ஜியார் கூட ஒரு வெற்றிகரமான நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு நல்ல திரைப்பட இயக்குனராகும். '   ஆ ராசா அவர்கள் அரசியல்வாதி நல்ல நிர்வாகி என்பதை எல்லாம் விட அவர் உச்சம் பெற்றது 2 ஜி வழக்கு போரில்தான் .   அது  முழு திராவிட இயக்கத்திற்கும் எதிராக கட்டமைக்கப்பட்ட ஒரு போர்தான்.    அந்த போரின் மையப்புள்ளியாக காலம்   ஆ ராசாவை நிறுத்தி இருந்தது.    அந்த போரில் திராவிட இயக்கமும் திமுகவும் அதன் தலைவர்களும் தொண்டர்களும் அடைந்த விழுப்புண்கள் ஏராளம் .

திருமதி கனிமொழியையும் குறி வைத்தே தாக்கினார்கள் .. நிச்சயமாக அவரின் ஆளுமையை இனம் கண்டுதான் அந்த தாக்குதல் அவர் மீது தொடுக்கப்பட்டது.     ஒரு கட்டத்தில் எல்லா அம்புகளும் அத்தனை சக்திகளையும் திரட்டி கொண்டு மூர்க்கத்தனமாக பாய்ந்தது . 

இவர்களின் இடத்தில  வேறு எவர் நின்றாலும் கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருப்பார்கள் . 

அந்த புயல் வரும்போது எல்லோரும் திகைத்து நின்றார்கள் . ஏனெனில் அதன் கனம் அந்தளவு பயங்கரமாக பூதாகரமாக இருந்தது . 

அது வெடித்த கணத்தில் இருந்து அது கரைக்கடந்து போகும்வரை ஒரே மனோ நிலையில் சளைக்காமல் சலிக்காமல் வீரத்தோடு விவேகத்தோடு சிரிப்போடு அதை ஆ ராசா எதிர்கொண்ட விதம்  ஒரு காவியம் பாடத்தகுந்த வரலாறு.

இந்த மோசடி வழக்கை ஆ ராசா எதிர்கொண்ட விதம் தோல்வியில் துவண்டு போகும் எவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் . உத்வேகம் கொடுக்கும் . 

எப்பேர்ப்பட்ட உயரத்தில் இருந்த ஆ ராசாவை எங்கே கொண்டுபோய் தள்ளினார்கள் ? 

அப்போதும் எனக்கு யாரும் வாதாட தேவை இல்லை நானே வாதாடுகிறேன் .. வாய்தாவும் தேவை இல்லை . என்று தீர்மானித்தார் ராசா!

முழுக்க முழுக்க எதிர்திசையிலேயே நின்ற நீதிமன்றத்தின் மனசாட்சி தவுகளை முட்டி மோதி திறந்தார் 

 இது போன்ற ஒரு நிகழ்வை  இந்திய நீதிமன்றங்கள் இதற்கு முன்பு வரை கண்டதில்லை.. 

ஒரு அரசியல்வாதி ஆ ராசாவை ஒருவேளை எதிர்காலம் கவனிக்காமல் விட்டாலும் 2 ஜி வழக்கு ராசா என்பது ஒரு அரசியலையும் தாண்டியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக