வியாழன், 24 செப்டம்பர், 2020

லூலு தேவ ஜம்லா to Dr ஷாலினி : பெண்கள் சுதந்திரமா இருங்க, ஆனா ஒரு limitஓட .. அயோக்கியத்தனமா தெர்லியா மேடம்?

லூலு தேவ ஜம்லா : நீங்க சொல்ற அந்த “லிமிட்”... அது நபருக்கு நபர் வேறுபடும் என்கிறதையே நீங்க உணரல. கலாச்சாரத்தை சொல்லி சமூகத்தை சொல்லி எல்லாம் அதை உங்களோட வரையறைகளுக்கு உள்ள நிறுத்த நினைக்கிறது, உங்க benchmarksஐ வச்சி கட்டுப்படுத்த நினைக்கிறது எல்லாம் எந்த வகையில முற்போக்குன்னு நினைக்கிறீங்க? சுயசிந்தனையோட, உண்மையான சுயமரியாதையோட இருக்கிற, வாழ நினைக்கிற பெண்களால எப்டி எவனோ ஒருத்தன் வரையறுக்கிற வரையறைகளின்படி வாழ முடியும் என்கிற பேசிக் லாஜிக்கே இல்லியேமா உங்க பார்வையில?
நான் என் விருப்பப்படி வாழுறது தான் என்னோட சுதந்திரமா இருக்க முடியும். அந்த முழுமையான சுதந்திரம் தான் எனக்கு சந்தோஷத்தை குடுக்கும். என் சுதந்திரத்தால சந்தோஷத்தால என் குடும்பம் பாதிக்கப்படுதுன்னா இங்க மாற்றப்பட வேண்டியது, திருத்தப்பட வேண்டியது, சரி செய்யப்பட வேண்டியது என் குடும்ப அங்கத்தினர்களோட பார்வைக்கோளாறுகள் தானே தவிர, என்னோட வாழ்க்கைமுறை இல்ல. சமூகம் திருந்துறது வரை நீ அனுசரிச்சி அடங்கி போன்னு சொன்னீங்கன்னா, நான் எனக்காக, என் உணர்வுகளுக்கு உண்மையா எப்ப மேடம் வாழுறது? ஒரு எழுவது வருஷம் உயிரோட இருப்பேனா மிஞ்சி மிஞ்சி போனா? அந்த சின்ன life-spanஐ கூட நான் என் விருப்பப்படி வாழாம சமூகத்துக்கு கட்டுப்பட்டு தான் வாழணும்னு சொல்றது எந்த வகையில மேடம் நியாயம்?
“ஆம்பளன்னா அப்டி தான் இருப்பான், நீ தான் கவனமா இருக்கணும். உன்னோட உடல் பாகங்கள பார்த்து அவன் ஈர்க்கப்படுவான். நீ அவனுக்கு செக்ஸுக்காக signalling பண்ணுறன்னு எடுத்துக்குவான். நீ அப்டி கவர்ச்சியா உடை உடுத்தினா அவன் உன் கிட்ட வந்து ஏறத்தான் செய்வான். அதனால நீ மூடி பொதிஞ்சி பர்தா போட்டுட்டு நட. ஃபேஸ்புக்ல உன் ப்ரொபைலை லாக் பண்ணி வை. அப்ப தான் நீ பாதுகாப்பா இருப்ப! நீ available இல்லன்னு காமிச்சா தான் ஆண் உன்னை கண்ணியமானவளா பார்ப்பான், மதிப்பான்” - அய்யே!! இதான் உங்க முற்போக்கு ஐடியாலஜியா? What about explicit mutual consent? 😃
நீங்க சொன்ன “ஆண் மயில் தோகை“ உதாரணம் எல்லாம் கேட்டு சிரிச்சிட்டேன். அந்த விலங்கினங்களும் மனுசப்பிறவியும் ஒண்ணா அப்ப? மனுசனுக்கு பகுத்தறிவுன்னு ஒண்ணு இல்ல? பொம்பள சிரிச்சா உடனே அவ படுக்க தான் கூப்பிடுறான்னு நினைச்சிகிட்டு ஆம்பள வந்து ஏறிருவான், அதனால பொம்பள நீ சிரிக்காதன்னு சொல்றது உங்களுக்கே அசிங்கமா தெர்லியா மேடம்? “ஒருத்தன் உன்னை அப்டி சீப்பா நினைச்சி அணுகினா முதல்ல not interested அல்லது NO அப்டீன்னு சொல்லி தடை பண்ணு. அதையும் மீறி ஏற வர்றவனை அடிச்சி துரத்துற அளவுக்கு பலமானவளா இரு! எவனுக்காகவும் உன் சிரிப்பை நிப்பாட்டாத! உன் சிறகுகளை முறிச்சிக்காத!” - இப்டி ஏன் உங்கள மாதிரி முற்போக்காளர்களால எல்லாம் அடிச்சி பலமா சொல்ல முடியல? பயம்! சமூக பயம்!! அதானே? 😃
ஒரு விஷயம் சொல்லட்டா மேடம், நான்லாம் அவ்ளோ கவர்ச்சியா முலைப்பிளவ வெளிய காமிச்சி தொடையை முழுசா வெளிய காமிச்சி தான் படங்கள் வீடியோக்கள் போடுறேன், அதுவும் பப்ளிக் வ்யூல. ஆனா நான் செக்ஸுக்காக சிக்னலிங் பண்ணுறேன்னு என்னை தெரிஞ்ச எந்த ஆம்பளையும் வந்து அணுகுறது இல்லியே? ஏன்? ஏன்னா லுலு கிட்ட அணுகுனா டாப்பு எகிறிரும்னு அத்தனை பேருக்கும் தெரியும். தெரிவிச்சிருக்கேன். எப்டின்னு நினைக்கிறீங்க? 😉
“ஆமாடா நா இப்டி தான் இருப்பேன், என் விருப்பம் போல தான் வாழுவேன், நீ என்ன பண்ணுவ? நீ டேவ்டியான்னு சொன்னா நான் அப்டி ஆகிருவேனா?” அப்டீன்னு நிமித்திகிட்டு நின்னு சவால் விட்டு, என்னோட ஒவ்வொரு அசைவுகளாலயும், “பொம்பளன்னா இப்டி தான் இருந்தாவணும்” என்கிற சமூகத்தோட கற்பிதங்கள சுக்கு நூறா உடைச்சிருக்கேன். நீங்க இப்ப பெண்களுக்கு சொல்ற அறிவுரைகள் எனக்கும் ஒருகாலத்துல சொல்லப்பட்டவை தான். அதையெல்லாம் மதிச்சி நானும் பாதுகாப்பா இருக்கணும் எச்சரிக்கையா இருக்கணும்னு அடங்கி ஒடுங்கி இருந்திருந்தேன்னா கண்டிப்பா இப்ப வரை என்னால நான் இப்ப சுவாசிக்கிற மாதிரியான முழு சுதந்திர காற்றை சுவாசிச்சிருக்கவே முடியாது.
அதனால தயவு செஞ்சி இந்த “ஊரோடு ஒத்துவாழ்” டைப் பாகவதங்கள எல்லாம் நிறுத்திட்டு, “ஒன்று சேர்! புரட்சி செய்! அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!” என்கிற மாதிரியான உண்மையான முற்போக்கை போதிக்க ஆரம்பிங்க. நீங்க குனிய குனிய உங்க எதிராளி (கலாச்சார காவலன்கள் எல்லாம் சேர்ந்து) குட்டிட்டே தான் இருப்பான். அதனால “ஒருத்தன் உன்னை தாக்குனா டபுள் மடங்கா திருப்பி தாக்கு! நீ திருப்பி தாக்குற அளவுக்கு அவன்(ள்) ஒர்த்தான பீஸ் இல்லியா, அப்ப அய்யே கோமாளி! அப்டீன்னு அவன(ள) பார்த்து சிரிச்சிட்டு கடந்து போ!” - இந்த மாதிரி சொல்லி பெண்கள தைரியமானவங்களா தயார்படுத்துங்க. தன்னை, தன் இனத்தை தாக்குறவன காலால எட்டி மிதிச்சிட்டு கடந்து போகுற பக்குவமுள்ள பெண்கள ஒண்ணா திரட்டி ஒரு பெண்கள் படை அமையுங்க! அது முற்போக்கு! 😊
☝️இதை நான் செஞ்சேன் என்கிறது தான் இணைய உலகமே ஒண்ணா சேர்ந்து என்னையும் என் பெண்கள் குழுவையும் அபாண்டமா பழி சுமத்தி அடிக்கிறதுக்கான உண்மையான காரணம் என்கிறதாவது உங்களுக்கெல்லாம் தெரியுமா மேடம்? தெரியாதுன்னா தயவுசெஞ்சு தீர ஆராய்ஞ்சி தெரிஞ்சுக்கங்க... நன்னி நமக்கம். 😁
அன்பில்,
லுலு தேவ ஜம்லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக