சனி, 26 செப்டம்பர், 2020

பாடகர் SPB யின் மறைவு காலம் தாழ்த்தி அறிவிக்கப் பட்டுள்ளது? விவசாயிகளின் போராட்டத்தை மக்கள் கண்களில் இருந்து மறைக்கவே?

Maha Laxmi : ·சிங்கப்பூர் செய்தித்தாளில் முதல் பக்கத்தில் இந்திய விவசாயிகளின் போராட்ட செய்தி.. ஆனால் தமிழக / இந்திய செய்தித்தாளில் எங்கே? ஏன் மறைக்கப்படுகிறது?

ஊடகங்களில் பெரிதாக மீண்டும் மீண்டும் ஒரு விடயம் பேசப்படுகிறது என்றால் மிகவும் சந்தேகப்பட வேண்டிய காலகட்டம் இது . பாஜகவின் வரலாறு இந்த பாடத்தை தந்துள்ளது . எஸ்பி பாலாவுக்காக ஓவராக ஊடகங்கள் கண்ணீர் சிந்துவதை  அந்த கோணத்தில்தான் பார்க்கவேண்டும்  எத்தனையோ மோசமான பிரச்சனைகளை மறக்கடிக்க இன்று எஸ்பி பாலாவுக்காக மக்களின் கண்ணீரை ஆறாக பெருக்கெடுத்தது ஓடவைப்பதில் வழக்கம் போல ஊடகங்க பெரு வெற்றி பெற்றுவிட்டன.     இவர்கள் வெற்றி பெறும்போதெல்லாம் மக்கள் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறார்கள் .  பணமதிப்பு இழப்பாகட்டும் வேறு எந்த திடடத்தை பாஜக கொண்டுவந்தாலும் அதை முழு மனதோடு எஸ்பி பாலா ஆதரித்தவர் என்பதையும் நினைவு கூறுதல் நல்லது..  உடன் பிறப்பே வாழ்க வளர்க்க வெல்க 

Sundar P : விவசாயிகளின்  போராட்டத்தை மக்கள் கண்களில் இருந்து மறைக்கவே SPB யின் மறைவு காலம் தாழ்த்தி அறிவிக்கப் பட்டுள்ளது... 

Yogapaartiban AP : இரங்கலில் ஒளிந்திருக்கும் அரசியல் விசித்திரமானது. அனைத்து உடகங்களிலும் இரங்கல் தெரிவித்தார் என காட்டப்படும் தலைவர்கள் யார்? அதிகாரத்தை வைத்து கொண்டு நேற்று வரை மக்களை பாடாய் படுத்தியவர்கள்.

 "Talent honour" ஒரு மனநோய். "முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்/மாணவி", ராகெட் வட்டி அறிவாளி இப்படி எல்லா திறமையுமே பணக்காரர்களுக்கு facility கூட்டும். 

ஆனால் சாமானிய மக்களுக்கு என்ன கிடைக்கும். நான் பாராட்டுவதையோ, இரங்கல் தெரிவிப்பதையோ குற்றம் சொல்லவில்லை. அதன் அளவுகோல் தவறு என்பது தான் என் குற்றச்சாட்டு. உதாரணமாக மக்களுக்கு சேவை செய்த தெரேசா அவர்களுக்கும் ராணுவ மரியாதை, தன் திறமையால் மக்களிடமிருந்து சம்பாதித்த ஒருவருக்கும் அதே மரியாதையா? என்பது தான் என் கேள்வி. வல்லவன் வாழ்வான் ஆனால் நல்லவன் தான் வாழவைப்பான். இது புரியும் வரை கார்ப்பரேட் காரன் மட்டும் தான் வாழ்வான்.

G Shanmugakani : இவரைப் போன்ற உலோபிகளுக்குத்தான் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யும் ஆணை பிறப்பிக்கிறது அரசு. அரசின் செயல் மனிதத்திற்கும் மனித நேயத்திற்கும் இழுக்கானது. இசைக்காக தண்டபாணி தேசிகரும், மதுரை சோமுவும் ஆற்றிய அளப்பரிய சேவைகளைவிட பாலு சைக்காற்றிய பணி என்ன, பணம் சம்பாதித்ததைத் தவிர.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக