செவ்வாய், 15 செப்டம்பர், 2020

சூர்யாவின் அகரம் Foundation நீட்டுக்கு ஆதரவான நூலை வெளியிட்டுள்ளது .. இன்னும் திரும்ப பெறவில்லை?

Umamaheshvaran Panneerselvam : அகரம் Foundation வெளியிட்ட புத்தகத்தில் இப்படி இருக்கும்போது, சூர்யா பற்றிய என் ஐயம் Justified. சூர்யா மேல் வன்மமோ, கடுப்போ எனக்கில்லை. சமூகநீதியின் பக்கம் யார் நின்றாலும் எனக்கென்ன நோகப் போகிறது ?

ஆனால் தனது அமைப்பு வெளியிட்ட புத்தகத்தில் நீட் ஆதரவான அப்பட்டமான வரிகள் இருக்கும்போது அவர் அதை Refute செய்கிறாரா அல்லது அந்த புத்தகம் திரும்பப்பெறப்பட்டதா என்று தெரியாதவரை ஐயம் இருப்பது இயல்பு. ஜல்லிக்கட்டுக்காக மாடு மாடு என்று ஊர் ஓடியபோது , மக்கள் நீட்டுக்காக போராடவேண்டும், என்று வலியுறித்தியதோடு அல்லாமல் அதற்கான பதாகை தாங்கிது நம்மில் சிலர். மெரினாவில் ஸ்டாலின் உள்ளே வந்தபோது, அவரை வெளியேரும்படி செய்து " எங்களுக்கு தலைவர்களே வேண்டாம், தை புரட்சி, மக்களே மக்களைப் பார்த்துக் கொள்வார்கள் " என்றபோது அடுத்து வரப்போகும் ஆபத்தை, முறையான அரசியல் இயக்கம் அல்லாத தனி குரல் மடைமாற்றப்படும் சிக்கலை சொன்னதும் நம்மில் சிலர்.

அன்றெல்லாம் ஸ்டாலினுக்கு ஆதரவாக வராத வாய்கள், இன்று சூர்யாவை நோக்கி ஒரே ஒரு ஐயம் கேட்டால் அதைவைத்து டமால் டுமீல் என்று திட்டுவதும், அடாபுடா என்று ஏசுவதும் சிரிப்பு. கை

தட்டல்களால் எப்படி என் ஆன்மா உய்யவில்லையோ, அதுபோல் அவதூறுகளால் சோர்வடையப் போவதும் இல்லை.  

தலைவா தலைவா என்று விடலைப் பருவத்தில் ரஜினி பின்னே ஓடி, நெய்வேலியில் திரையுலகம் உண்ணாவிரதம் இருக்க, ரஜினி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க, காவிரி விவகாரத்தில் தலைவன் டா, தமிழன் டா, ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு டா என்று ஏமாந்த வரலாறு எனக்கு உண்டு.

போலவே " இரு கட்சிகளும் வேண்டாம், சென்னை வெள்ளத்தில் வேலை பார்த்த உங்களைப் போன்ற ஆட்களுக்கு சீட்டு தருகிறோம்" என்று சொன்ன ஒரு லெட்டர்பேடு கட்சி நாளடைவில் முழு பாஜக ஆதரவு கட்சியாக மாறியதைக் கண்டோம்.

ஆக, முன்பு ஒரு விஷயத்தை ஆதரித்து அதைப்பற்றி எந்தவித விளக்கமுமின்றி திடீரென எதிர்ப்பவர்கள் மீது , நோக்கம்மீது ஊற்று நோக்குவது இயல்பே. I take everything and everyone with a pinch of salt.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நாளை ADMK manifesto வில் நீட்டை நீக்குவோம் என்று எழுதி வைப்பார்கள். அதாவது மக்களுக்கு என்ன பேசினால் மயங்குவார்களோ ஏற்படுமோ அதை காட்டி ஆதாயம் அடைவது சிலர் வாடிக்கை. அண்ணாவை விமர்சித்துக்கொண்டே தனி தமிழ்நாடு பேசுவது, பெரியாரை , கலைஞரை இகழ்ந்து திராவிடம் பேசுவது, பெரியாரை மட்டும் புகழ்ந்து அண்ணா கலைஞரை இகழ்ந்து பலர் செய்யும் அரசியலை பார்த்தே வருகிறோம் எனுபோதும், முந்தைய நிலைப்பாட்டை முழுவதும் மாற்றிவிட்டீர்களா என்று கேட்பது அவரைத் தாக்க அல்ல, நம்மை தற்காத்துக் கொள்ள.

இன்றைய சென்சேஷனுக்காக பேசும் சிலருக்கு இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் டாக்டர் அனிதா என்று எழுதியதற்காகவே பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு, நீட் எதிர்ப்பு என்பது பாஜக எதிர்ப்பு என்று சிலரால் குறைவைக்கப்பட்ட நம்மில் சிலருக்கு ஒருவரது அண்மைக்கால மனமாற்றம் முழுமையானதா அல்லது காலப்போக்கில் மாறப்போவதா என்று கேட்க தார்மீகம் இருக்கிறது. ஏனெனில் இன்று பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக கூட நீட் வேண்டாம் என்று கூறும்.  மற்றப்படி தூற்றுவோர் தூற்றவும், ஏத்துவோர் ஏத்துவதும் எனக்கு ஒன்றே.

இந்த விஷயத்தில் சூர்யா என்றில்லை. கலைஞராகவே இருந்தாலும் இது தான் என் நிலைமை.    .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக