ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!

nakkeeran :முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82 வயது) காலமானார்.உடல்நலக்குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ஜஸ்வந்த் சிங் காலமானார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நிதித்துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஜஸ்வந்த் சிங். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக