வெள்ளி, 11 செப்டம்பர், 2020

திமுக ஐ டி விங் உண்மையில் திமுகவுக்கு உதவியாக இருக்கிறதா?

திமுகவின் ஐ டி விங்...   திராவிட முன்னேற்ற கழகம் என்றால் என்ன அதன் கொள்கை என்ன அதன் வரலாறு என்ன என்பது பற்றியெல்லாம்   கொஞ்சம் கூட கவலைப்படாத ஒரு கூட்டம் திமுகவின் ஐ டி விங்கில் இருக்கிறதோ என்ற   ஐயம் எழுந்துள்ளது.

இன்று ஏறக்குறைய எல்லோர்  கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது.  கட்சிகளின் கொள்கையும் கட்சி பற்றிய செய்திகளும் பெரிதும் இதன்  வழியாகவே மக்களுக்கும் கழக உடன்பிறப்புக்களுக்கும் செல்கிறது.

எனவே இந்த ஐ டி விங்கின் செயல்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் . அதன் ஒவ்வொரு களப்பணியாளரும் மிகவும் கவனமாக செயல்படவேண்டியது அவசியம் .    ஆனால் இதுபற்றிய புரிதல் அற்ற சிலர் எப்படியோ ஐ டி விங்கில் களப்பணியாளர்களாகி உள்ளார்கள் போல் தெரிகிறது.

 ஒரு சாதாரண திமுக ஆதரவாளர் அப்படி இருந்தால் அதை  புறந்தள்ளி விடலாம்.. ஆனால் திமுகவின் ஐ டி விங்கில் இருப்பதாக கூறப்படுபவரின் கருத்தியல் ஆழம் பண்பு  நேர்மை போன்றவற்றை அப்படி புறந்தள்ளி விடமுடியாது ,.  கவனத்தில் கொள்ளப்பட  வேண்டியது அவசியமாகும்.  ஏனெனில் இவர்கள் திமுகவின் கோட்ப்பாடுகளை மக்களுக்கு வேகமாக எடுத்து செல்லும் அரிய பணியில் உள்ளவர்கள்.

இந்த பணியில் உள்ள சிலரின்  செயல்பாடுகள் காரணமாகவே திமுகவின் ஆதரவு தளம் சரிந்து போகும் ஆபத்தும் உள்ளது . 

குறிப்பாக ஒருவர்  திமுக ஐ டி விங்கை  சேர்ந்தவர் என்ற அடையாளத்தோடு வீசிய தரமற்ற பதிவுகள் காரணமாகவே இதை குறிப்பிடவேண்டி உள்ளது.

திமுகவின் ஒரு பொறுப்பில் உள்ளவர் எவ்வளவு பொறுப்பு வாய்ந்தவராக இருக்கவேண்டும்?   திமுக என்பது வெறும் கட்டைப்பஞ்சாயத்து ஜாதி கட்சியோ அல்லது வெறும் சினிமா ரசிகர்களின் கட்சியோ அல்ல.

நீண்ட திராவிட கருத்தியல் கோட்பாட்டின் அடிப்படையில் எழுந்து நிற்கும் சமுக மறுமலர்ச்சி இயக்கமாகும் . வெறும் தேர்தல்களை மட்டும் நோக்கமாக கொண்ட கட்சியல்ல.

கமிஷன் பேர பரிமாற்றங்களால் வளர்ந்த கட்சியல்ல .     முழுக்க முழுக்க கொள்கை சார்ந்த மாபெரும் இயக்கம் இது.  

ஒரு பொறுப்பில் உள்ளவர் மிக மோசமான வார்த்தைகளை முகநூலில் அள்ளிவீசியுள்ளார் . அதுவும் எதற்காக? 

நாதகாவின் கல்யாணசுந்தரத்தின் பேச்சை இவர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார் . கலைஞரை எவ்வளவு மோசமாக அவதூறு செய்யமுடியுமோ அவ்வளவு மோசமாக பொய்யுரைகளால் அர்ச்சனை செய்தவர் இந்த கல்யாணசுந்தரம். திமுக மீது இல்லாத பொல்லாத வகையில் சேறு வாரி வீசியவர் இவர்.  இவர்களின் திராவிட வெறுப்பு சொல்லி மாளாது .அவ்வளவு மோசமான வரலாறு கொண்டவர் இந்த கல்யாணசுந்தரம் .

இவரது காணொளியை தனது முகநூலில் பதிவிட்டதை தவறு என்று குறிப்பிட்டு நீங்கள் எல்லாம் திமுகதான் என்ற சந்தேகத்தை தெரிவித்ததற்கு அவர் ஆற்றிய எதிர்வினைகள்  அசல் சீமான் ரசிகர்களுக்கே உரித்தானது.

சங்கிகளும் இதர கட்டை பஞ்சாயத்து கட்சி ஆதரவாளர்களும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

திமுக பொறுப்பில் உள்ளவரிடம்  இருந்து இதுபோன்ற அணுகுமுறையை இதுவரை எதிர்பார்த்தில்லை .

இவர்கள் சிலீப்பர் செல்லாக இருக்க வாய்ப்பு உள்ளது . ஏனெனில் திமுகவின் எந்த கருத்தியலும் இவர்களிடம் இல்லையே?

திமுகவின் பலம் என்பது அதன் திராவிட கொள்கை சார்ந்த மக்கள்தான்.  இவர்களை போன்ற திமுகவின் கொள்கைகைகளுக்கு நேரெதிரான போக்கு உடையவர்கள் எந்த அடிப்படையில் இந்த பொறுப்புக்களுக்கு எல்லாம் வந்தார்கள் என்பது புரியவில்லை.

ஒருவேளை இவர்கள் சில மாவட்ட பெரியவர்களின் சிபாரிசில் வந்திருந்தால் நிச்சயம் இவர்களை இந்த பொறுப்புக்களில் இருந்து விடுவிக்க வேண்டும். இவர்கள் திமுகவின் வாக்குகளை சேதாரம் செய்து விடவும் கூடும் .  வெறுமனே சிபாரிசில் வேலைக்கு சேர இது ஒன்றும் கம்பனி அல்ல . இது கழகம் . திராவிட முன்னேற்ற கழகம் . இங்கே மக்கள் நலம் ஒன்றேதான் குறிக்கோளாக இருக்கவேண்டும் . 

தமிழகம் போதிய அளவு துயரங்களை அனுபவித்து கொண்டிருக்கிறது .

மக்கள் திமுகவைத்தான் ஒரே ஒரு விடிவெள்ளியாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  அந்த வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைந்துவிடும் சிலீப்பர் செல்களை இனம் காணவேண்டும் .  

எல்லாவற்றிலும் மேலாக இந்த ஐ டி விங்கில் உள்ளவர்களுக்கு திமுகவின் வரலாற்றை கற்று கொடுக்கவேண்டும் .

 (அந்த ஐ டி விங்கை சேர்ந்தவரின் பதிவுகளில்  சிலவற்றை  இங்கே தந்துள்ளேன்)

ஒரு சாதாரண பதிவுக்கே இவ்வளவு கொச்சையாக பேச முடியும் என்றால் இவர்கள் திமுக என்ற ஆலமரத்தில் இருந்து கொண்டு கப்பம் வசூலிக்க கூடும்  என்ற சந்தேகம் வராதா?  அந்த மிரட்டல் தோரணை அதைத்தான் காட்டுகிறது.

திராவிட கருத்தியல் பற்றிய அறிவோ தெளிவோ இல்லாதவர்களை இப்படிப்படட பொறுப்பில் நியமித்தால் இவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் திமுகவின் நற்பெயர்க்குக்கு களங்கம் விளைவிப்பார்கள் என்றே கருதுகிறேன்.  

திமுகவின் களப்பணியாளர்கள் அனைவர்க்கும் ஒழுங்கு விதிமுறைகள் பற்றிய புரிதல் வேண்டும் .. வெறுமனே கலைஞர்  உதயநிதி போன்றோர்களின் கலர் படங்களை முகநூலை பதிவிடுவது மட்டும்தான்திராவிட கருத்தியல் என்று கருதினால்  இவர்கள் ஒருபோதும் கலைஞரின் உண்மையான உடன் பிறப்புக்கள் ஆக மாட்டார்கள் 

கலைஞரே முன்பொருமுறை குறிப்பிட்டது போல் திராவிட கருத்தியல் தெளிவு அற்ற இவர்களை போன்றவர்கள் அணிகள் அல்ல பிணிகள் 

Kalai Selvi : பிழையில்லாம ஒழுங்க தமிழ் எழுதக் கூட வராத நபர்தான். நாகபட்டினம் திட்டச்சேரி திமுக IT Wing அமைப்பாளராம்!   கொடுமை .

 இவரின் கண்ணியமற்ற அநாகர்க பதிவையும் பின்னூட்டங்களையும் பாருங்க எனக்கு நினைவுத் தெரிந்த நாளிலிருந்து இப்படி பட்ட கண்ணியமற்ற பொது நாகரீகமும் அற்ற திமுக என்று சொல்பவர்களை நான் பார்த்ததே இல்லை.
ஆமாம் திமுகவில் இருந்து விட்டாலே திமுக காரன் ஆகி விட முடியுமா என்ன? தலைவர்களுடன் Uடம் போட்டு விட்டாலே திமுககாரன் என்றாகிவிடுமா?
திமுககாரன் என்றால் அது ஒரு Brand I தராதரமுள்ளவன் சபை நாகரீகத்துடன் பதிவிட அறிந்தவன் - ஆம் அது கொள்கையடிப்படையில் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு (அ) பரம்பரையா இருப்பவர்களுக்கு, '
ஆனா நதக விசிக நீல சங்கிக மன நிலை மாதிரி எதிர்வினையாற்றிக் கொண்டு திமுககாரன் என்றால் ஏதோ வெளவால்களைத் தான் நினைவுப்படுத்தும்.
நான் இப்பவும் கூறுகிறேன் - இம் மாதிரியானவர்கள் திமுகவினரே கிடையாது யாரோ சிபாரிசிலே கட்சியில் சேர்ந்து அப்பதவிகளை பெற்று எதற்கோ கட்சியில் இருப்பவர்களை திமுக காரன் என்றெல்லாம் - ___ அழைப்பது கொடுமை அசிங்கம்   .    தலைவர் has to Tame these Morons

 மெய்பொ பதிவு இணையவெளியில் திமுகவுக்கு ஆதரவாக அதன் உறுப்பினர்கள் மட்டும் எழுதுவதும் இயங்குவதும் கிடையாது. இயக்கத்தின் பால் பற்று கொண்டு, கலைஞரின் மேல் பற்று கொண்டு, அல்லது கொள்கைகளின் மேல் பற்று கொண்டு இயங்குபவர்களும் உலகலாவிய அளவில் மிக அதிகம். .

அவர்கள் அனைவருமே திமுகவின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்களல்ல..ஆகையால் சமூக வலை தளங்களில் ஒருவருக்கொருவருடைய   செயல்பாட்டின் மேல் தர்க்க ரீதியான விமர்சனங்கள் வரலாம். யார் என்ன எப்படி எனக் கூட தெரியாமலும் வாதங்கள் நிகழக் கூடும். அதில் சரி தவறு என்ற இரு ஒப்புமைகளும் இருக்கலாம். அதற்கான வியாக்யானங்களை நம் முன் இருப்பவர்களுக்கு தெரிவிக்கும் பொழுது நாம் மிக க்டுமையான க்ட்டுப்பாடுகளையும் நாகரீகத்தையும் கடை பிடிப்பது மிக அவசியமாகிறது. உறுப்பினரல்லாதவர்களுக்கு இருக்கக் கூடிய பொறுப்பை விட உறுப்பினராக்வும் கழகத்தின் பதவியிலும் இருப்பவர்களுக்கும் மிகுந்த கடமைகளை க்ழகம் வகுத்திருக்கிறது. 

ஒர சில புண்படுத்தும் பதிவுகளில் அதை எழுதியவர் லாஜிக்கே இல்லாமல் எழுதியிருந்தாலும் அதற்கான வினை என்பது நாகரீகமாக இருந்தால் இரு பக்கமும் கண்ணியம் கூடும். கழகத்தின் பாலபாடங்கள் அப்படி தான் இருக்கும். வசைச் சொற்களை பேசுவதால் பொது வெளியில் நம்முடைய மதிப்பும் சரிந்து போகக் கூடிய அபாயமும் இருக்கிறது.. வெறுப்பு சார்ந்து கழக்த்தைப் பற்றி எழுதுபவர்களுக்கெல்லாம் எப்ப்டியான ஆதரவு தளங்கள் பெருகிக்கொண்டுள்ளது என்பதையும் எந்தவிதமான எத்கிர்பார்ப்புமில்லாமல் கழக்த்துக்கு ஆதரவாக வெளியில் இருப்பவர்களை ஒரே அடியில் வெளியே துரத்தி விடாதீர்களென்று கண்ணியம் மிக்க கழகத்தினரை தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன். நன்றி. 

 

kalaiselvi :உண்மையான கலைஞரின் உடன்பிறப்புக்கள், திமுககாரர்கள் இப்படி ஈழப்பண பங்கீடு தகராறு அடியாட்களுக்கெல்லாம் promote செய்ய மாட்டார்கள், அப்படி செய்வதை விமர் சிப்பவர்களை சங்கிகளைப் போலவே எதிர்க்க மாட்டார்கள். தராதர மற்று அடிமட்ட திமுககாரன் | திமுக தொண்டன் கடைசிவரை எதிர்த்தரப்பாறை தன் பக்க நியாயத்தை ஒப்புக் கொள்ளச் செய்யவே அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மெனக்கெடுவார்கள். 

அதுதான் திமுக உடன்பிறப்பின் DNA . ஆனா இந்த மனிதனின் மொழியப் பாருங்கோ எவ்வளவு மட்டரகம் | இவனுக்கு நேரம் செலவழித்ததை பேராசிரியரின் பேச்சை போட்டிருக்கலாமல்லவா. இந்த பதிவர், மனிதன் தும்பிகளின் Sleeper Cell ஆக திமுகவில் ஏன் இருக்கக் கூடாது ? 

 Radha Manohar க்கு திமுக வின் கொள்கைகளின் வரலாற்றின் திராவிடம், சமூக நீதியின் முதலானவைகளின் மீதுள்ள ஆழமான படிப்பினை உறுதி தெளிவு பிடிப்பில், இந்தப் பதிவருக்கு 1% இருந்திருந்தால் கூட இப்படி மொழியை பிரயோகித்திருக்க மாட்டார். 

தி மு க IT Wingல் RSS ன் பல பிரிவுகளின் Sleeper Cellகள் குறிப்பாக தம்ளர் சோம்பிகள் நிறைய உள்ளனர்! அவர்களை களையெடுங்கள், 



 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக