செவ்வாய், 22 செப்டம்பர், 2020

திமுக முன்னாள் எம் எல் ஏ மா. மீனாட்சிசுந்தரம் காலமானார் . கொரோனா ..

நக்கீரன் :கீழத்தஞ்சை திராவிட  முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும் -  வேதாரண்யம் தொகுதியின் சட்டமன்ற கழக முன்னாள் உறுப்பினரும் - கொண்ட கொள்கையில் உறுதிமிக்கவருமான, 'மா.மீ' என அன்புடன் அழைக்கப்படும் அண்ணன் மா.மீனாட்சிசுந்தரம் அவர்கள், கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இயற்கை எய்திய கொடுஞ்செய்தி, இன்று அதிகாலை நேரத்தில் இடிபோல என்னைத் தாக்கியது என இரங்கல் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.   அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும், கழகத்தின் முப்பெரும் விழாவில் மா.மீ. அவர்களுக்கு "பெரியார் விருது" வழங்கி ஒருவாரம் கூட நிறைவுறாத நிலையில், இயற்கையின் இந்த சதியை ஏற்க மனம் மறுக்கிறது.தனது 17-வது வயதில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்ட மா.மீ. அவர்கள், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் அடியொற்றி, இறுதிவரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்து மறைந்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக