சனி, 19 செப்டம்பர், 2020

திமுக வழக்கு: வழக்கிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல் .. உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து

 case-against-copyright-notice-withdrawal-from-high-court-judge-case .hindutamil.in :பேரவை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு அறிவித்துள்ளார்.

பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் பேரவை உறுப்பினர்கள் உரிமைக் குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட 18 திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் இன்று 9-வது வழக்காக விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது.  ஆனால், வழக்குகளை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பாக திமுக தரப்பு வழக்கறிஞரிடம், முதல் முறையாக 2017-ஆம் ஆண்டு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்து தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்துள்ளதால், இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து தற்போது தொடர்ந்துள்ள வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக நீதிபதி ரவிச்சந்திரபாபு தெரிவித்தார்.

இந்த வழக்குகளை மற்றொரு தனி நீதிபதி முன்பாகப் பட்டியலிடும்படி நீதிமன்றப் பதிவுத்துறைக்குப் பரிந்துரைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக