ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

காமராஜர் கொலை முயற்சி வரலாறு .. கல்லெறிந்து கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தீவைத்தனர் ஆர் எஸ் எஸ் ( ஜன் சங் - பாஜக)

திராவிட ஆய்வு : நவம்பர் 7, 1966 ஆம் ஆண்டு டெல்லியில் காமராஜரை தாக்க

தலைநகர் டெல்லியில் திரண்டிருந்தது இந்துத்துவா இயக்கங்கள். அவர்கள் கைகளில் வாள், கடப்பாரை, கத்தி,திரிசூலம் போன்ற ஆயுதங்களுடன் காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அவர்களின் வீட்டை நோக்கி விரைந்தனர் . அப்போது வீட்டில் காமராஜர் இருந்தார். அவரை சந்திக்க வந்த ஒரு நண்பர் அவரை ஒரு அறையில் வைத்து வெளியே பூட்டினார். வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டிக்கு தீ வைத்தது கலவர கும்பல். காமராஜரின் வீடு சூறையாடப்பட்டது. காமராஜரின் உதவியாளர் நிரஞ்சன்லால் இந்துத்துவ கலவர கும்பலால் தாக்கப்பட்டார். வீட்டை சூழ்ந்து கொண்டு கற்களை வீசி கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர். குளிர்சாதன கருவிக்கு வைத்த தீயால், வீடே புகை மண்டலம் ஆனது. காவல்துறை வருவதற்குள் காமராஜரை உள்ளேயே வைத்து எரித்து விட வேண்டும் என்று வீட்டிற்கு தீ வைத்து விட்டார்கள் இந்துத்துவ இயக்கத்தினர்.
காமராஜர் அருகில் இருக்கும் எம்.பி கள் குடியிருப்பு பகுதிக்கு பின் வாசல் வழியாக உடனிருந்த சிலரால் கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர்
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்களுக்கு சவால் விட்டு 11/12/66 அன்று சேலம் பொதுக் கூட்டத்தில் , ' குறிப்பாக அவர்களுக்கு பயம் என்னைப் பற்றி தான். இந்த காமராஜர் தான் சோசலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அதிலே தீவிரமாக இருக்கிறான் என்கிறார்கள். என் வீட்டுக்குத் தீ வைக்கின்றான்.ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.
கடமையை செய்தே தீருவேன் என்று பேசினார் காமராஜர்.
இதை நவசக்தி 15/12/66 அன்று வெளியிட்டது.

அதே காமராஜரைத்தான் தற்போது தங்கள் அரசியல் வாழ்விற்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர் விவஸ்தை கெட்ட பாஜக வினர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக