ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

கருணாவை ஒதுக்க அல்ல ஓரங்கட்ட அல்ல ஒழிக்கவே நினைத்தார்கள்.

 Niro Jan : நானும் இப்போ 90 kids மாதிரி சும்மா விளையாட்டு பிள்ளையாகவே இருந்திருபேன் .என்னை கருணா அம்மானின் தீவிர ஆதரவாளனாக மாற்றிய பெருமை Australia, Sydney தமிழ் சங்க தலைவர்களே காரணம் .2012 படகு மூலம் Australia வந்த போது அவர்கள் கூறிய காரணம் 'மட்டக்களப்பு ஆக்கள் இங்க குழப்ப வாறார்கள்' நான் எந்த இடம் என்று அறியாமல் முகத்துக்கு நேரே கூறி விட்டார்கள். அதன் பிறகு தான் அம்மானின் விடையத்தை ஆழமாக ஆராய்ந்தேன் . அப்போது புரிந்தது அம்மான் பக்கம் நியாயமான காரணங்கள் இருக்கிறது என்று. எவர் என்ன கதைத்தாலும் நான் என்றும் அம்மான் பக்கமே.!

Reginold Rgi: கருணா அம்மான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் சொல்ல போனால் புலிகளின் இராணுவ தளபதி.. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை இராணுவ நடவடிக்கைகளும் கருணாவின் தலைமையில் நடைபெற்றது பாரதத்தில் சிறந்த வில்லாளன் கர்ணனுக்கு ஒப்பானவன் குறிதவறாமல் கொள்கையுடன் விடுதலைப்போராட்டத்தினைக் கொண்டு சென்றவன். அப்படியான ஒருவனுக்கு இரண்டாவது தலைமைத்துவம் கேட்பான் என்று பகல்கனவில் விழித்த புலிகளின் ஏனைய தளபதிகள் “கருணா கேட்க முன்னமே அவரை விடுதலைப் பொராட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான திட்டங்களை வகுத்தனர். அதில் 1. தமிழ்ச் செல்வன் மட்டக்களப்புக்கு வந்து கருணாவின் திட்டங்களை அறிந்து தலைவரிடம் தவறாக முன்வைத்தது

2. பொட்டு அம்மான் மட்டக்களப்பு வந்து கருணாவைச் சந்தித்து தவறான தகவலை தலைவருக்கு முன்வைத்தது.

3. நடேசன் காவல் துறையினரை அனுப்பி இங்குள்ள தளபதி கருணாவின் தலையீடு இல்லாமல் நிருவாகத்தை நடத்தி மக்களின் மனங்களை நோகடித்தது

4. கல்வித்துறை கருணாவின் தலையீட்டினை விட்டுச் செயற்பட்மை

5. நிதித்துறை தேசிய புலனாய்வு திட்டத்துடன் செயற்பட்டமை

இந்த ஐந்து தாக்குதலும் கருணாவினை பணியவைத்து, அவரை அழிப்பதற்காகத் திட்டம்போட்டு நடத்தப்பட்டது. இந்த வேளையில் எல்லாம் மக்கள் வன்னி நிருவாகத்தினால் மேற்கொள்ளப்படுவது தெரியாமல் கருணாதானே தளபதியாக இருக்கார். இவருக்குத் தெரியாமல் நடக்காது இவருதான் காரணம் என்று நினைத்துக் கொண்டார்கள்..

ஆகவே கருணா அம்மானுக்கு
1. வன்னி நிருவாகத்தினாலும்
2. மட்டக்களப்பு மக்களாலும் இருமுனைத் தாக்குதல் இடம்பெற்றது.

இந்த நிலையிலும் நிலை குலையாது இருந்த போதுதான் பாரிய குண்டைப் போட்டார்கள் நிதி மோசடி இதனை மக்கள் நம்பத் தொடங்கினார்கள். அந்தக் கதையினை சாதுவாக சமூகத்துக்குள் பரவவிட்டு கருணா அம்மான் மனதில் கறையை உண்டாக்கினார்கள். இது அவருடைய மனதில் புயலாக மாறியது.

இதன் பின்னர் மெல்ல மெல்ல கருணாவை தாக்கத் தொடங்கினார்கள். இதற்கு ஒரு சில மட்டக்களப்புத் தளபதிகளையே பயன்படுத்தினார்கள். கருணா மீது களங்கத்தை ஏற்படுத்தினார்கள் அதுதான்
1. 1000 போராளிகளை அனுப்பு
2. அல்லது நீ வன்னிக்கு வா
3. அல்லது மட்டக்களப்பிலே போட்டுத்தள்ள மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவினரை வன்னியில் இருந்து அனுப்பியதெல்லாம்

இந்த உள்ளார்ந்த நிலைப்பாடு எத்தனை பெருக்கு தெரைியும்?

நீங்கள் இதற்குப் பதில் அளிக்கமுடியாது. கருணாவை ஒதுக்க அல்ல ஓரங்கட்ட அல்ல அடியோடு அழிக்கவே நினைத்தார்கள். கருணா அவர்களுக்கு சிம்ம சொற்பணம் அவன்தான் கிழக்கை வழிநடத்துவான் என்பதனை அவர்கள் அறிந்து அவனை அழிக்கவே குறி வைத்தார்கள் மற்ற மட்டு/அம்பாரை தளபதிகளை ஒரு பார்வையிலே அடக்கலாம் அல்லது அழிக்கலாம் என்பது புலிகளுக்கு நன்றாகவே தெரியும் இதுதான் உன்மை நீங்கள் முன்வைக்கும் வினாக்கள் எல்லாம் வெற்றுத் தோட்டா போன்றது.

“உன்மை ஒருபோதும் உறங்காது”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக