செவ்வாய், 8 செப்டம்பர், 2020

சீமான் கட்சியில் வெளிநாட்டு வசூல் தகராறு .. ஆளுக்கு ஆள் ... சீமானை மிஞ்சிய வசூல்வேட்டை

சீனி மாணிக்கம்  : வணக்கம் திரு.சீமான் அண்ணா அவர்களே... தமிழ்தேசியத்தின் முகமும் முகவரியுமாக அடையாளப்படுத்தப்படும் உங்களின் தம்பிகள், திரு.கல்யாண சுந்தரம் மீது திடீரென்று வீசுகின்ற விமர்சனக் கற்கள் உங்கள் கவனத்திற்கு வரமாலிருக்க வாய்ப்பில்லை... 

அந்த வகையில், கடந்த தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட கல்யாண் அவர்கள் வெளிநாட்டிலிருந்து 38 லட்சம் நிதி பெற்று கையாடல் செய்ததாக கல்யாண் மீது குற்றம் சுமத்தும் செய்தி உண்மை என்றே இருக்கும் பட்சத்தில், மீதி 39 வேட்பாளர்கள் சேர்ந்து கையாடல் செய்த தொகையின் மதிப்பு தோராயமாக எவ்வளவு இருக்கும் அண்ணா??? கையாடல் செய்ததால் தான் 5 மாதமாக பேசாமல் அவரை (கல்யாண்) புறக்கணித்ததாக நாம் எடுத்துக்கொண்டால் கூட, கருமாயப்பட்டு வெளிநாட்டில் உழைத்து அனுப்பிய ஈழத்தமிழர்களின் 38 லட்சம் பணத்தை கையாடல் செய்ததற்கு தண்டனை வெறும் புறக்கணிப்பு மட்டும் தானா???

அது உங்களின் சொந்த பணமாக இருக்கும் பட்சத்தில் பெரிய மனதோடு மன்னிக்க உங்களுக்கு உரிமையிருக்கலாம், ஊராரின் பணத்தை ஒருவர் கையாடல் செய்ததற்கு புறக்கணித்து மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது?      கோவையில் தேர்தல் நிதியில் கையாடல் என்று கண்டுபிடிக்க முடிந்த உங்களுக்கு, கும்பகோணம் என்ற ஒரு தொகுதி இருக்கிறது என்பது தெரியுமா?

கும்பகோணம் பற்றி நீங்கள் விசாரித்தால், காஞ்சிபுரத்தில் நீங்கள் கட்டி வருகின்ற சொகுசு பங்களா பற்றி "மணி, மணியாக" அவர் பேசிவிடுவார் என்ற அச்சமா??

இன்னும் சில மாதங்கள் கழித்து எவரோ ஒருவரை நீக்குகின்ற போது இதே போன்ற "கையாடல்" காரணத்தை சொல்வீர்கள் என்றால், இப்போதே நீக்கிவிடலாமே? செய்வீர்களா?

தன்னை தவிர எவரும் வளர்ந்து வர கூடாது என்னும் ஜெயலலிதா அரசியலை செய்வதற்கு நீங்கள் ஒன்றும் ஜெயலலிதா இல்லை என்பதையும், இயக்கம் அத்தனை பெரிய வளர்ச்சிக்கு அருகில் கூட இல்லை என்பதையும் உங்களுக்கு யார் சொல்லி புரியவைப்பது?

இரண்டாம் கட்டமாக வளர்ந்து வரும் ஒவ்வொருவரை வீழ்த்துவதற்கும் ஏதேனும் ஒரு காரணத்தை தயார் செய்து வைத்திருக்கிறீர்கள், இளமையை தொலைத்து உழைத்தவனை உதறி தள்ளியதும் போதாதென்று, அவனின் தனி வாழ்வை அசிங்க படுத்தி அனுப்பும் உங்கள் அரசியல் நியாயமானது தானா?

திருவொற்றியூர் மாரிமுத்து இரண்டாம் திருமணம் செய்ததில் தகராறு, கட்சியின் பெயர் கெட்டுவிடும் என்று திரு.கோகுல் ஐயாவின் பேச்சைக் கேட்டு அவனை (தி.மாரிமுத்து) நீக்கினீர்கள் சரி, மகளிர் பாசறை பொருப்பாளரின் வீட்டு சுவரேறி குதித்து, பல் உடைந்தபடி வந்த "பச்சகிளி" யை ( அன்பு தென்னரசு) இன்றுவரை நீக்கவில்லையே ஏன் அண்ணா?

திருப்பூர் சுடலையை குடிப்பதாக சொல்லி நீக்கினீர்கள் சரி, கடந்த மாதம் பாட்டிலும் சிப்சுமாக படத்தோடு வெளிவந்த மதுரை மண்டல செயலாளரை ( வெற்றி குமரன் ) குறைந்த பட்சம் பொறுப்பில் இருந்து கூட நீக்கவில்லையே ஏன் அண்ணா?

குழு அரசியல் செய்ததாக பேரா. அருளினியனை நீக்கினீர்கள் சரி, மத அரசியலை செய்கின்ற மாண்புமிகு கல்வியாளர் ( ஹுமாயின் ) அவர்களை கண்டித்ததாவது உண்டா?

இன்று கல்யாண் அவர்கள் வெளிநாட்டில் பணம் வசூலித்ததாக சொல்கிறீர்கள் சரி, வெளிநாட்டிலிருந்து கட்சிக்காக நிதியாக கொடுத்துவிட்ட வைர நெக்லஸை கழுத்தில் போட்டுக்கொண்ட, காளியம்மாள் அவர்களை நீக்கவில்லையே ஏன் அண்ணா?

சாட்டை எடுத்து நாட்டை திருத்த போவதாக சொல்லி, youtube சேனலின் வளர்ச்சிக்காக ஐரோப்பிய நாட்டில் ஒரே நபரிடமிருந்து 30 லட்சத்தை ஆட்டையை போட்ட 'துரைமுருகன்' மீது, ஓர் அப்பாவி பெண்ணின் மரணத்திற்கு பின்பாகவும் கூட நடவடிக்கை இல்லையே ஏன் அண்ணா? உங்களின் "அமீரா" திரைப்படத்தின் தயாரிப்பு பங்குதாரராக 15 லட்சம் கொடுத்தாரே, அதனாலா???

போகட்டும்.
பலரின் மீதும் பாலியல் குற்றச்சாட்டை வைத்து நீக்கிய நீங்கள், நீக்கும்போது என்ன ஏதுவென்று காரணம் கூட சொல்லாமல், ஒரு வார்த்தை கூப்பிட்டு கூட விசாரிக்காமல் தான்தோன்றிதனமாக நீக்கி, பெண்ணுரிமை பாதுகாக்கும் உங்களை போற்றுகிறோம் அண்ணா...
ஆனால் பிறந்தநாள் கேக் வெட்டி மாமியாருக்கு ( விஜயலட்சுமியின் அம்மா ) ஊட்டிவிட்ட புகைப்படம் தொடங்கி, 'மாமா நல்லவன் இல்ல மா' என்று டிக்டாக் வீடியோ வரை பல ஆதாரபூர்வமான செய்திகள் இணையத்தில் இருந்தும் கூட உங்கள் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் இல்லையே அண்ணா ஏன்? நீங்கள் கட்சிக்கு தலைவன் என்பதாலா?

"மக்கள் தவறு செய்யலாம் மன்னிப்பு உண்டு, தலைவன் தவறு செய்தால் தண்டிப்பு மட்டுமே தீர்வு" எனும் தத்துவத்தை தாங்கள் அறியாததா?

போகட்டும்....
இனி வருகின்ற காலங்களிலாவது, உங்களின் "பாக்கிய" மாணவர்களுக்கு வேண்டாதவர்களை நீக்கும் போது, இப்படி அவதூறு பரப்பி , அசிங்கப்படுத்தி நீக்காமல், அனுப்பி வையுங்கள், அது போதும் அண்ணா.

கட்சியை விட்டு நீக்கப்பட்ட போதும் என்றாவது ஒருநாள் நீங்கள் ( நாம்தமிழர் ) வெல்லுவீர்கள், என்ற நம்பிக்கை என் போன்ற
தம்பிகளுக்கு இருந்தது அண்ணா,
கல்யாண் விலகளுக்கு பின் அந்த
நம்பிக்கையும் அற்றுப் போனது.

இப்படிக்கு உங்களின் முன்னாள் இளையவன்.

சீனி மாணிக்கம்

அ. வெற்றிவேல் : · நேற்று வெளியான தமிழ் கேள்வி செந்திலுடனான உரையாடலில் திரு.கல்யாணசுந்தம் முக்கியமான செய்தியைப் போற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார். 2015 முதல் 2019 நாடாளுமன்றத் தேர்தல் வரை குடும்பத்துடன் ஜெர்மனியில் தங்கி இருந்து 34 நாடுகளில் நாம் தமிழர் அமைப்பை கட்டி அமைத்திருப்பதாகச் சொன்னார். பணி நிமித்தமாக ஜெர்மனியில் தங்கி இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.கட்சி அமைப்பிற்காகத் தான் தங்கி இருந்திருப்பார் என்பது நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்தவுடன் களப்பணியாற்ற தமிழ்நாடு வந்ததுல இருந்து அறியக் கிடைக்கிறது. இதன் பின்னணியில் இரண்டு கேள்விகள் 34 நாடுகளில் நாம் தமிழர் அமைப்புகளில் இருப்பவர்கள் ஈழத் தமிழர்களா ? தமிழ் நாட்டுத் தமிழர்களா? 34 நாடுகளில் கட்டி அமைக்கத் தேவையான பொருளாதாரப் பின்புலம் உள்ளதா நாம் தமிழர் அமைப்பு.? அப்படி இருப்பின் நாம் நினைப்பதை விட பணக்காரக் கட்சி தான் நாம் தமிழர் கட்சி அவரது பேட்டி முதல் பின்னூட்டத்தில்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக