ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

நீட் .. திருச்செங்கோடு மாணவர் மோதிலால் தற்கொலை... தமிழகத்தில் ஒரே நாளில் மூன்றாவது மாணவர்

Shyamsundar -  tamil.oneindia.com : நாமக்கல்: நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்றாவதாக ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாளை நாடு முழுக்க நீட் தேர்வு நடக்க உள்ளது. கடும் எதிர்ப்பிற்கு இடையே நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் வரிசையாக அடுத்தது மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல், அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். 

மாணவர்களின் தொடர் தற்கொலை தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த நிலையில் சற்று நேரம் முன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சம் காரணமாக தூக்கிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று பேர் இதன் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

நாளை நீட் தேர்வு.. ஒரே நாளில் அடுத்தடுத்து 2 தற்கொலை.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. சோகம்! நீட் தேர்வு.. ஜோதி ஸ்ரீயை தொடர்ந்து மேலும் ஒரு மாணவர் மரணம்.. தருமபுரியை சேர்ந்த ஆதித்யா தற்கொலை! 

"சோர்ந்து போய் விட்டேன்".. நீட் தேர்வுக்கு தயாரான மதுரை மாணவி தற்கொலை.. பெரும் சோகம் 

இன்று காலை மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, நீட் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆதித்யா கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Read more at: https://tamil.oneindia.com/news/namakkal/neet-fear-one-more-student-commits-suicide-in-tamilnadu-3-dies-today-397456.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக