புதன், 2 செப்டம்பர், 2020

ஜாதி வெறியிலிருந்து ஒரு கட்சியை உருவாக்கி ஜாதி வெறியை பற்றவைத்தாயிற்று

Nilavinian Manickam : சாதிவெறி கட்சிகள்-ஷண்முக நீதி சாயங்கள் ! 

ஒரு கட்சியை அதன் சாதி வெறியிலிருந்து உருவாக்கி ..அச்சாதியைச் சார்ந்த அனைத்து இளைஞர்களிடத்தும் சாதி வெறியை பற்ற வைத்தாகி விட்டது.   பிறகு தனித்தனியே பல்வேறு பிரிவாக உள்ள அச்சாதி இளைஞர்களை சாதியின் கீழ் ஒரு கற்பனை வளையத்துக்குள் வைத்து ஒருங்கிணைத்து சாதி வெறி ஊட்டுவது.         இது முதல் நிலை. அடுத்தது மக்கள் மன்றத்தில் எவ்வாறு இவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறார்கள்?       தன் சாதியைச் சார்ந்த சாதி வெறியுள்ளவர்களை அனைத்து முற்போக்கு இயக்கங்கள் மற்றும் பெரிய கட்சிகளில் ஊடூருவச் செய்வது. இவ்வாறு ஊடுறுவியோர்,அங்கு இச்சாதிக் கட்சியையும்,தலைவரையும் சமூக நீதிக் கட்சி மற்றும் தலைவரென கட்டமைக்கும் சில்ற பணியை செய்து கொண்டே இருப்பர்.           வழக்கமாக ஒரு அரசியல் கட்சி பேசும் அனைத்து மக்கள் பிரச்சனையும் அறிக்கை மற்றும் இணைய போராட்டங்களின் வாயிலாக பேசுவதால் தங்களின் அடிப்படை அடையாளத்தை மாற்றி விடலாமெனவும் முடிவிலிருப்பர்.ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதிவெறியினரின் மொத்த அரசியலை பல்வேறு நிலைகளில் கண்ட எவர்தான் சமூக நீதிக்கட்சியென சான்றளிப்பர்? 

அதேபோல யாருமே அக்கட்சி மற்றும் தலைவரின்மீது கேள்வி எழுப்பி விவாதிபப்பதை இவர்கள் செரித்துக் கொள்வதே இல்லை.ஏனெனில் சாதி என்பது அவ்வளவு புனிதமல்லவா?
அங்கே விவாதங்களிலும் இவர்களனைவருமே ஆர்.எஸ்.எஸ் போல ஒரே வழிமுறை வைத்து பின்பற்றுகின்றனர்.அதில் முதலில் வயது வித்தியாசமில்லாமல் எதிரில் பேசுபவர்களை ஒருமையில் பேசி அவர்களை மரியாதைக்குறைவாக பேசுவது.இரண்டாவதாக இவனுகள் சொல்லும் அதே கருத்தை நாமும் ஒத்துக் கொள்ளாவிட்டால் நம்மை சூத்திரன்(வேசி மகன்)என வசை பாடுவது ..கடைசியாக வீட்டு பெண்களையும் இழிவு படுத்துவது..இது சாதி வெறிக்குழுவின் வழமையான நடவடிக்கை.இவர்களைதான் ஷண்முக நீதிக் காப்பாளர்கள் எனப் போற்ற வேண்டுமாம்.

அதாவது ஒரு கட்சி சமூக நீதிக்கட்சியென்ற பெயர்...

தொண்டர்கள் கூறுவதாலோ,
மற்ற கட்சிகளில் ஊடுருவியுள்ள அனுதாபிகள் கூறுவதாலோ,
கட்சியினர்கள் வலிய கூறுவதாலோ,
சாதியினர் விளம்பரப்படுத்துவதாலோ,
மற்ற முற்போக்கு இயக்கங்களுடன் ஒட்டிக் கொள்வதாலோ..
சாதி வெறியர்கள் மற்றவர்களை வற்புறுத்துவதாலோ

வந்து விடுமா என்ன?
இல்லையில்லை.இல்லவே இல்லை.இவர்கள்

பிறகெப்படி சமூக நீதிக்கட்சி என்ற அந்தஸ்து வரும்?

மக்களறிந்த களத்தில் அக்கட்சி எப்படி தன்னை வார்த்தெடுத்தது என்பதற்கான வரலாறு.
ஆரம்பம் முதலே தலைவர் மற்றும் தொண்டர்களின் சமூக நீதி சார்ந்த செயல்பாடுகள்.

இவற்றின் மீதான மக்களுணர்ந்த மதிப்பீடுகள்தான் ஒரு கட்சி,சாதிவெறிக் கட்சி,சமூகநீதிக் கட்சி அல்லது சண்முக நீதிக்கட்சி என்பதனை முடிவுரைக்கும்.
சமூகநீதிக்கான நற்பண்புகளை இச்சாதிவெறியர்களைப்போல மேற்குறிப்பிட்ட குறுக்கு வழிகளில் கட்டமைத்து மக்களை நம்ப வைக்க இயலாது.
அவையெல்லாம் ஒரு கட்சியின் ஆரம்பப் புள்ளி, தொடர் களச் செயல்பாடுகள் ,தலைவர் மற்றும் தொண்டர்களின் சமுதாயம் சார்ந்த மக்கள் நலச் செயல்பாடுகளால் மக்களே இயல்பாகவே முடிவெடுப்பதால் மட்டுமே நடக்குமென்ற உண்மை உணர ஜாதி வெறி உணர்வாளர்களின் அறிவு ஒத்துக் கொள்ள மறுக்கிறது.அதற்கு இவர்களுக்கு ஜால்ரா தட்டாதவர்களை மற்றும் இவனுகளோட ஜாதிவெறிய சுட்டிக் காட்டி பேசுபவர்களை கேவலப்படுத்துவது,அசிங்கமாகப் பேசுவதையே செய்து கொண்டுள்ளனர்.

ஜெய் சாதி! பொய் நீதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக