புதன், 9 செப்டம்பர், 2020

அரியலூர் மாணவன் தற்கொலை: இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்? - மு.க.ஸ்டாலின்

dailythanthi.com : நீட் தேர்வு அச்சத்தால் அரியலூர் மாணவன் தற்கொலை செய்துள்ளான். இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

நீட் தேர்வு அச்சம்; அரியலூர் மாணவன் தற்கொலை: இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்? - மு.க. ஸ்டாலின்

சென்னை,அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் (19) மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஞாயிறன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் விபரீத முடிவு எடுத்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

   இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் அரியலூர் மாணவன் தற்கொலை செய்துள்ளான். இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-நீட் தேர்வுக்கு தயாரான அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவன், விக்னேஷ் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கிடைத்துள்ள தகவல் மனவேதனையை ஏற்படுத்துகிறது.


நீட் பலிபீடத்தில் மேலும் ஓர் உயிரை இழந்திருக்கிறோம். இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்?.

இந்த நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்:எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக எதிர்கொள்ளுங்கள். தற்கொலை எண்ணத்தை விடுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக