வியாழன், 10 செப்டம்பர், 2020

நாம் தமிழர் கட்சி.. ..நடராசன் மூலமாக பயனடைந்து..

Kandasamy Mariyappan : நாம் தமிழர் கட்சி... இளைஞர்களின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தூண்டி, வளர்க்கப்பட்ட நிறுவனம். இது மக்களுக்கான கட்சி அல்ல! பல நாடுகளில் கிளைகளை திறந்து, ஈழத்தமிழர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களை பணம் காய்க்கும் மரமாகவே பார்த்து, பணம் பெருக்கும் நிறுவனமாக மட்டுமே இருந்துள்ளது நாம் தமிழர் கட்சி என்பதை, இரண்டு நிர்வாகிகள் மூலமாக நாம் உணர முடிகிறது! 

எங்களுக்கு பின்னே பல இளைஞர்கள் இருக்கின்றனர் என்ற மாய தோற்றத்தை உருவாக்கி, மா. நடராசன் மூலமாக பயனடைந்து திமுகவிற்கு எதிராக களமாடியது...
நாம் தமிழர் கட்சி!

பல இளைஞர்கள் அங்கே இருப்பதாக தவறாக புரிந்துகொண்ட RSS/BJP, அதன் பங்குக்கு அந்த நிறுவனத்தை தூண்டிவிட்டு திமுக/ அதிமுகவிற்கு எதிராக களமாட வைத்தது.
மற்ற மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சி பெற்ற நிலையில் தமிழ்நாடு மட்டும் முன்னேறவில்லை என்று பல இளைஞர்களை நம்ப வைக்க, அந்த நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டது!

அரசியல் களத்தில் இவைகள் நடைமுறையில் உள்ள ஒன்றுதான். எனவே நமக்கு இதன் மீது எந்த ஒரு கோபமும் இல்லை.

ஆனால், எனது மிகப்பெரிய வருத்தம்...
15 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களை திராவிட சித்தாந்தத்திற்கு எதிரான மனநிலையை வளர்த்ததுதான், இன்றளவும் தாங்கிக் கொள்ள முடியவில்லை!

எனவே 15 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் நான் கேட்டுக் கொள்வது...

உங்களுக்கான இயக்கம் எது,
நீங்கள் வாழும் மாநிலத்தின் சிறப்பு என்ன,
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது உங்கள் மாநிலம் எப்படி வளர்ந்தது..
என்பதை தேடிப் படியுங்கள்.

திராவிட சித்தாந்தம், பெருவாரியான மக்களுக்கான இயக்கம், RSS சித்தாந்தம் 5 சதவீதமான மக்களுக்கான இயக்கம்.

திராவிட கட்சிகள் தவறு செய்யவில்லை என்று கூறவில்லை. ஆனால் மற்ற மாநில கட்சிகளை விட திராவிட கட்சிகள் எப்படி என்பதை ஒப்பிட்டு பாருங்கள்!

பணம் பெருக்கும் நிறுவனத்தின் CEOவாக இருக்கும் சில வியாபாரிகளின், உணர்ச்சிமிக்க பேச்சை கண்டு மயங்காமல்...
உங்களது, உங்களுடைய மாநிலத்தின், உங்களுடைய இனத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க எது சிறந்ததோ என்று சிந்தியுங்கள்.

 


 இப்படத்தில் திமுக அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவி நிதியை தலைவர் கலைஞரிடம் இருந்து பெற்ற மாணவர் யார் என்று தெரிகிறதா...?

அவர் வேறு யாருமல்ல; “நாம் தமிழர் கட்சி”, கல்யாணசுந்தரம்.

DrManohar Aldo t1Sploanus6horedo · அதை ஏன் ராஜிவ் காந்தி நாம் தமிழர் கட்சியில் இருந்ததை பேரின்ப 'கனாக்காலம்' என்று கூறுகிறார்.. அதிபர் சொன்ன கதைகளை எல்லாம் கேட்டு வெட்டியாக வாழ்க்கையை 'கனவு கண்டு' தொலைக்காதீர்கள் என்று அறிவுரை கூறுகிறார் நிகழ்கால தம்பிகளுக்கு. தம்பிகள் புரிஞ்சுக்கோங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக