செவ்வாய், 8 செப்டம்பர், 2020

புலிகளால் எல்லாவற்றையும் இழந்தது தமிழக மக்களும் திமுகவும்தான்! இலாபம் அடைந்தது அதிமுகவும் பார்ப்பனர்களும்தான்!

Neelavannan :  1 . ஈழப்பிரச்சனை உருவான காலங்களில் கலைஞர்தான் முதல் முதலாக ஓங்கி குரல் கொடுத்து தமிழகத்தின் பட்டி தொட்டிக்கெல்லாம் அந்த செய்தியை எடுத்து சென்றார் . முழு இந்தியாவையும் உலுக்கும் வண்ணம் போராட்டங்களை முன்னெடுத்தது அதை இந்திய பிரச்சனையாக மாற்றினார்.
கடலில் தத்தளித்து ஓடிவந்த அத்தனை போராளி குழுக்களுக்கும் அழைப்பு அனுப்பினார் . அந்த அழைப்பை பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் புறக்கணித்தனர்.   
அதுவரை அமைதியாக இருந்த எம்ஜியார் பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்தார் அவருக்கு பண உதவியும் செய்தார்.
2 . ஈழத்தில் இயக்கங்கள் அத்தனையும் போராடிக்கொண்டு இருந்தன.
இந்திய அரசை மட்டும் நம்பி இருக்காது அனைத்து இந்திய எதிர்க்கட்சிகளையும் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான சக்தியாக திரட்டும் முயற்சியில் மதுரையில் டெசோ மாநாட்டை கூட்டினார்.
3. அந்த மாநாடு நடந்து கொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாணத்தில் புலிகள் டெலோ மீதான கொலைவெறியை மேற்கொண்டு ஸ்ரீ சபாரத்தினத்தையும் கொன்றார்கள். டெசோ மாநாட்டுக்கு வந்த இந்திய தலைவர்களும் தமிழகமும் ஈழ போராட்டத்தின் மீது முதல் முதலாக நம்பிக்கை இழக்க தொடங்கியது .. ஈழத்தின் மீதே இந்திய மக்களுக்கு அவநம்பிக்கையம் வெறுப்பும் உண்டானது.
4 . டெலோவை அழித்த பின்பு இலங்கை ராணுவம் வேகமாக முன்னேறி புலிகளை அச்சுவேலி என்று சிறு நில பரப்பிற்குள் குறுக்கியது.

இன்னும் சில வாரங்களில் இலங்கை அரசு ஈழ போராட்டைத்தை முற்று முழுதாக துடைத்து எறிந்துவிடும் என்கின்ற வெற்றியின் விளிம்பில் நின்றது.

5 . அன்றய நிலையில் இலங்கை அரசு படுமோசமான ராணுவ பயங்கரவாதத்தை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடும் என்ற நிலை உண்டானது.

6. இந்திய அரசுக்கு இலங்கை மீது பலம் பிரயோகிக்க வேண்டிய நிர்பந்தம் உண்டானது. இலங்கை மீது உணவு பொதுக்களை போர் விமானங்கள் மூலம் பறந்து சென்று போட்டது.

இந்தியாவின் இலங்கை ஈடுபாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்த புலிகள் முயன்றனர். . தமிழகத்தில் இருந்த புலி வியாபாரிகளும் அதற்கு தூபம் போட்டனர்

7 . இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்குக்ம் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது .. அதில் புலிகளின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் ஜனநாயக வழிக்கு வருமாறு வலியுறுத்தபட்டனர் .

வடகொரியா பாணி அரசை கற்பனை செய்து கொண்டிருந்த பிரபாகரன் (வடக்கு புலிகள்) எப்படியாவது இந்த ஒப்பந்தத்தை சீர்குலைத்து மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க அத்தனை அக்கிரமங்களையும் அரங்கேற்றினர். அதில் வெற்றியும் பெற்றார். மக்களின் அழிவு மீண்டும் ஆரம்பித்தது.

8 . எம்ஜியார் மறைந்தார் .! 1989 இல் கலைஞர் மீண்டும் ஆட்சிக்குவந்தார் . 13 வருடங்களுக்கு பின்பு திமுக தேர்தலில் வெற்றி பெற்றது .

வெற்றி பெற்ற கலைஞருக்கு பிரபாகரன் உதவி கேட்டு சமாதான தூது அனுப்பினார். காயப்பட்ட போராளிகளை பராமரிப்பதற்கு என்று கையேந்தினார். அதற்கு இரங்கிய கலைஞர் புலிகள் தமிழகத்திற்குள் சுதந்திரமாக வந்து போக அனுமதி அளித்தார். கலைஞரின் அனுமதியை பெற்ற புலிகள் செய்த முதல் வேலை பத்மநாபாவையும் அவரோடு சேர்த்து 13 ஈ பி ஆர் எல் எப் தலைவர்களையும் சென்னையில் பட்ட பகலில் கொன்றார்கள் .இதன் காரணமாக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

9 . 1991 இல் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது . மத்தியில் திரு வி பி சிங் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் நிலைமை இருந்தது.

தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

21 மேமாதம் 1991 ஆண்டு ஸ்ரீ பெரும்பூதூரில் தேர்தல் பிரசார கூட்டத்த்தில் வைத்து ராஜிவ் காந்தியை படு மோசமாக புலிகளை கொன்றனர்.

.திமுக தலைவர்கள் தொண்டர்கள் மீது காங்கிரஸ் அதிமுக குண்டர்களும் போலீசும் படுமோசமான பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றினர்.

அதன் பின் நடந்த தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றிபெற்றார். ராஜீவ் காந்தியின் இறப்புக்கு பின்பு வாக்கெடுப்பு நடந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிகளை குவித்தது .. நரசிம்ம ராவ் பிரதமரானார்.

10 .. அதிமுக ஜெயலலிதாவின் கையில் சென்றபின்பு புலிகள் திமுகவை கைப்பற்றும் .முயற்சியில் இறங்கினார்கள். வைகோவை கூம்பு சீவி விட்டார்கள் .

புலிகளின் கொலை பட்டியலில் கலைஞர் பெயரும் இருப்பதாக மத்திய உளவு துறை கலைஞருக்கு தகவல் அனுப்பியது.. அந்த செய்தி நம்பக்கூடிய ஒரு செய்தியாகவே பலராலும் கருதப்பட்டது .

ஏனெனில் புலிகளின் அத்தனை தொண்டர்களும் ஆதரவாளர்களும் அல்லகைகளும் அளவு கணக்கில்லாமல் கலைஞர் மீது படு கேவலமான வசைமாரி பொழிந்து கொண்டிருந்த காலமது. அதுதான் அவர்களின் டிசைன் . கொல்வதற்க்கு முன்பாக சேறு வாரி வீசுவார்கள் . அவைதான் புலிகளின் கொலை சிக்னல்.

காலம் முழுவதும் புலிகளின் இந்த கொலை சிக்னல் கலைஞர் மீது இருந்தது

இப்போதும் எக்ஸ் புலிகள் கலைஞர் மீது வசை மாரி பொழிந்த வண்ணமே உள்ளார்கள் . தங்களின் குறி தவறிவிட்டது என்ற ஆற்றாமை . இதில் புலிகளுக்கு உசாத்துணையாக நெடுமாறன் போன்ற பலரும் இருந்துள்ளார்கள் என்பது கவனத்திற்கு உரியது.

11 . புலிகள் மக்களை முள்ளிவாய்க்காலுக்கு இட்டு சென்றது பற்றி எல்லாம் பலரும் பேசி விட்டார்கள் அந்த இறுதி நாட்களில் கூட கலைஞர் உணாவிரதம் இருந்ததன் மூலம் கனரக ஆயுதங்களை பாவிப்பதை ஒரு சில நாட்களாவது கலைஞரால் நிறுத்த முடிந்தது அந்த கால அவகாசத்தில் சிதம்பரத்தின் திட்டத்த்தை பிரபாகரன் ஏற்று இருந்தால் இந்த அழிவு அவர்களுக்கு நேர்ந்திருக்காது .

12 . ,அப்போதும் கூட பிரபாகரன் புலம் பெயர்ந்தோரின் ஆலோசனையை கேட்டு அமெரிக்க வரும் அல்லது எதாவது ஒரு அதிசயம் நடக்கும் என்று காத்திருந்தார் . என்ன செய்வது வாழ்க்கை முழுவதும் குருட்டு அதிஷ்டத்தை மேல் நம்பிக்கை வைத்து கொலைக்கு மேல் கொலையே கலையாக கொண்ட பிரபாகரனின் அறிவு அந்த அளவே .

13 . .புலிகளால் எப்போதும் இலாபம் அடைந்தது அதிமுகவும் நரசிம்ம ராவ் என்ற பார்ப்பனர் தலைமையில் ஆட்சி அமைத்தவர்களும்தான்.

புலிகளால் எப்போதும் துன்பத்தை அனுபவித்து எல்லாவற்றையும் இழந்தது தமிழக மக்களும் திமுகவும்தான் . இது பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள்..  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக