வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு -ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

maalaimalar : பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு 90 நாள் பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,  பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் அனுப்பிய மனு  நிராகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக சிறைத்துறை விளக்கம் அளித்தது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்தது.  பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக