புதன், 23 செப்டம்பர், 2020

ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி (65) கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

BBC ": இந்திய ரயில்வே இணை அமைச்சரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவருமான சுரேஷ் அங்காடி (65) இன்று உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்த தகவல் வெளிவந்துள்ளது.  சுரேஷ் அங்காடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கர்நாடகா மக்களுக்காக அயராது உழைத்தவர் அவர் என்று கூறியுள்ளா.  


கர்நாடகாவின் பெல்காம் தொகுதி கே.கே. கொப்பா பகுதியில் 1955ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பிறந்தார் சுரேஷ் அங்காடி. அதே தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2019இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் சுரேஷ் அங்காடி. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அவர், பெல்காம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் ஆரம்ப காலம் தொட்டு பணியாற்றினார்.

2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் வென்று தொடர்ச்சியாக நான்காவது முறையாக வென்ற எம்.பிஆக விளங்கினார்.

கடந்த 11ஆம் தேதி கொரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்ட தகவலை டிவிட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்ட சுரேஷ் அங்காடி, மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்

Velmurugan Balasubramanian : ரதயாத்திரை நடத்தி ரத்த ஆறு ஓட காரணமான அத்வானி சொந்த கட்சியாலேயே அசிங்கப்படுத்தப்பட்டு, இன்று இருந்த இடம் தெரியாமல் இருக்கிறார்.

சாமானிய மக்களுக்கு எதிரான பணமதிப்பிழப்பு கொண்டு வந்த அருன் ஜெட்லி அகால மரணமடைந்து விட்டார்.
ராணுவ வீரர்களுக்கு எதிரான 'One Rank One Pension' திட்டத்தை கொண்டு வந்த மனோகர் பாரிக்கர் புற்றுநோயால் இறந்து விட்டார்.
சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த அமீத் ஷா, அந்த திட்டம் கொண்டு வந்தது முதல் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
தற்போது விவசாயிகளுக்கு எதிரான மசோதா கொண்டு வந்திருக்கிறார்கள். நமக்கேன் பழி என்று விவசாயத்துறை அமைச்சர் பதவி விலகி விட்டார்.
'அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா' என்று காலம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது.
K R Venkatesh : ரயில்வே தனியார்மயம்.. மூத்த குடிமக்கள் பயன கட்டண சலுகை பறிப்பு.. எல்லாமே சேர்ந்து வச்சாங்க ஆப்பு... ஆமா... ரயில்பெட்டிகளை கோடிக் கணக்கா செலவு செஞ்சி கரோனா வார்டா மாத்தினீங்களே..கடைசிவரை நீயும் பார்கல..இதுவரை நாங்களும் பார்க்கலை.... தொலையுது... அப்படியே உள்துறையை கூட்டிட்டு போயிடு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக