புதன், 2 செப்டம்பர், 2020

தமிழகத்தில் இன்று 5,990 பேருக்கு கொரோனா பாதிப்பு - 98 பேர் உயிரிழந்துள்ளனர்!

தமிழகத்தில் இன்று மேலும் 5,990 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதாரத்துறை தகவல் > dailythanthi.com: தமிழகத்தில் இன்று மேலும் 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பாடில்லை. 

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 98 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,516 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,891 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.80,063 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 52,380 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 75,829 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 49,64,141 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மேலும் 1,025 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக