வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் : தமிழக அரசு

dinamalar.com : சென்னை:பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளில் தெரிவித்துள்ளது. 

இது குறித்து கூறப்படுவதாவது: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத சலூன், ஸ்பா ஆகியவற்றிற்கு ரூ. 5 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும். × முககவசம் அணியாவிட்டால் ரூ.200 ம் பொது இடங்களில் எச்சில் துப்புவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.        கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிகளை மீறும் வணிக நிறுவனங்களுக்குரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதன் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.           கலெக்டர்களுக்கு தலைமைச்செயலர் கடிதம் கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  

           தொற்றுப்பரவல் பொதுமக்கள் வழிமுறைகளை சரிவர கடைபிடிக்காவிட்டால் அக்டோபரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும். பொதுமக்கள் சரியான வழிமுறைகளை கடைபிடிக்கவும், வளர்ச்சிதிட்டப்பணிகளை செயல்படுத்தவும் கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமைச்செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக