திங்கள், 24 ஆகஸ்ட், 2020

சுனிதா.. பழங்குடி மாணவி NEET தேர்வுக்கு ஆன்லைனில்..

  இரா. இராஜகோபாலன் : இது சுனிதா.. மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் , கனக்வாலியை சேர்ந்த மலைவாழ் பழங்குடி மாணவி. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 98% எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது , NEET தேர்வு க்கு படித்து வருகிறார்... நல்லுள்ளங்கள் உதவியுடன் online coaching classல் இடம் கிடைத்துள்ளது.. ஆனால் தான் குடியிருக்கும் பகுதியில் கிராமத்தில் எங்கேயும் இன்டர்நெட் கிடைக்காது அதனால் அவளின் சகோதரர்கள் ஒரு மலை உச்சியில் இந்த சிறிய கொட்டகை போட்டு தந்துள்ளார்கள்... இங்கே கொஞ்சம் கொஞ்சமாக இன்டர்நெட் கிடைக்கிறதாம் ‌‌.காலை ஏழு மணிக்கு இங்கே வந்து மாலை ஏழு மணி வரை இங்கேயே தங்கி படித்து வருகிறாளாம் சுனிதா .. Such an inspiration..all the very best Sunita.. இறைவன் அருள் உன் துணை இருக்கும்.

ஆனால் தமிழகம் முழுவதும் ‌.. ஏன் இந்தியா முழுவதும்.... இப்படி படிப்பில் தாகம் கொண்ட சுனிதா க்கள் ஆங்காங்கே இருப்பார்கள்.... மருத்துவர் ஆக‌.. கலெக்டர் ஆக ஆவல் கொண்டு...   பலருக்கு ஆன்லைன் க்ளாஸ் க்கு மொபைல் இல்லை.      பலருக்கு இப்படி நெட் இருக்கும் இடத்தில் கொட்டகை போட்டு தர சொந்தங்கள் இல்லை.         பலருக்கு இப்படி ஆன்லைன் கோச்சிங் க்ளாஸ் நடக்கும் என கூட தெரியாது..       ஆன்லைன் விடுங்கள்,..

வழக்கமாக க்ளாஸ் நடக்கும் போதே இன்னும் ஆசிரியர்கள் இல்லாத பள்ளி... கழிப்பறை இல்லாத பள்ளிகள் எத்தனை எத்தனை... யாராவது மறுக்க போகிறீர்களா?

கட்டமைப்பு எதுவும் மேம்படுத்தாமல்...ஐந்தாம் வகுப்பு க்கு பொது தேர்வாம்...? பத்து வயதில் பள்ளி படிப்பை எத்தனை மாணவ மாணவிகள் விட போகிறார்களோ என்று பகீர் என்கிறது ...

ராஜகோபாலன் அப்போது கல்வி மேம்பட கூடாது என்கிறீர்களா என்றால் அப்படி சொல்லவில்லை...

புதிய கல்வி கொள்கை என பலரும் மார் தட்டுகிறார்கள்..

முதலில் கட்டமைப்பு எல்லா இடங்களிலும் ஒரே போல இல்லாத போது... இந்த கல்வி கொள்கை எப்படி அனைவரையும் ஒரே தட்டில் வைக்கும்?

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எல்லோரும் ஒரே இடத்தில் same start lineல் தொடங்குவது தானே போட்டி ‌..... சிலர் இருபது மீட்டர் முன் நிற்பதும்.. பலர் ஐம்பது மீட்டர் பின் நிற்பதும் போட்டியா??

அனைவரின் வாழ்க்கை தரம் முன்னேற அனைவருக்கும் ஒரு Refrigerator (புதிய கல்வி கொள்கை) தருகிறேன் என சொல்கிறீர்கள்.... நல்லது தான்... சிலருக்கு ரொம்ப நல்லது அது...
ஆனால் வீடில்லாத பலர் (கட்டமைப்பில் மிகவும் பின் தங்கிய நிலையில்) இருக்கிறார்களே... அவர்களின் நிலை என்ன?

Refrigerator வைத்து என்ன செய்வது??

மிகுந்த கவலையுடன்

- இரா. இராஜகோபாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக