ஏனென்றால் இந்து மதத்தை இந்துத்துவத்தை முன்வைத்து ஆண்டு கொண்டிருக்கும் அரசுக்கு நித்தியைப் போன்ற சாமியார்களின் துணையும் தொடர்பும் தேவையான ஒன்று.
நித்தி இன்று வெளியிட்டிருக்கும் நாணயங்களுக்குக்கூட சமஸ்கிருதத்தில்தான் பெயர் வைத்திருக்கிறான். சாமியார்களுக்கு ஆளும் பாஜக மத்திய அரசு தரும் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே.. எனவே இராமர், முருகர், விநாயகர் இவர்களை வைத்து அரசியல் செய்யும் அரசு, சிவனை வைத்து அரசியல் செய்யும் நித்தியானந்தா, தங்களுக்குத் தேவைப்படுவான் என்றே அவனுக்குத் தேவையான உதவியைச் செய்கிறதோ எனத் தோன்றுகிறது.
நித்தியானந்தாவின் இன்றைய நாணயம் வெளியிடும் வீடியோவை இந்த ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தந்து வெளியிட வேண்டும்? அவனால் மக்களுக்கு ஒரு பைசாவாவது பயன் இருக்கிறதா? அந்த வீடியோ எப்படி கிடைக்கிறது, அதில் உள்ள நிகழ்ச்சிகள் உண்மைதானா என எவ்வித நம்பகத்தன்மையும் அறியாமல் வீடியோவை வெளியிடுகிறார்கள்.
அதைப் பார்த்து உண்மை என்று நம்பும் அளவுக்கு நாம் இருக்கிறோம் என்று நித்தியும் நம்புகிறான். ஊடகங்கள் இனியும் அவன் வீடியோவை வெளியிட்டு மக்களை முட்டாளாக்க வேண்டாம். அவனை ஏன் இன்னும் அரசு கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லை என்று கேள்வி எழுப்புங்கள்.அதுதான் தேவை.
அருமை சகோதரா
பதிலளிநீக்கு