v4umedia.in/news : கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். திரு. சாமிநாதன் அவர்கள்,லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் K.முரளிதரன், G.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, கர்ணன் வருவான், தர்மசக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து, உள்ளம் கொள்ளை போகுதே, தோஸ்த், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, , உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, , அன்பே சிவம், கண்களால் கைது செய், ஒரு நாள் ஒரு கனவு, தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட இருபத்தி ஐந்துக்கும் மேல் பிரம்மாண்டமன படங்களை தயாரித்துள்ளார்.r />இவர் தயாரித்த படங்களில் இவர் சிறிய வேடங்களில் நடிப்பார். அப்படி இவர் நடித்த சில சீன்கள் இன்று வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ப்ரியமுடன் படத்தில் தளபதி விஜய் யுடன் ஒரு காட்சி மற்றும் பகவதி படத்தில் வடிவேலு அவர்களுடன் தோன்றிய காமெடி காட்சி இன்று வரை அனைவராலும் ரசித்து பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல
திரைப்பட தயாரிப்பாரிப்பாளர் சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக