ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

விடாப்பிடியாக இந்தியில் பேச்சு.. தமிழ் மருத்துவர்களை மிரட்டிய ராஜேஷ் கோட்சே.. நடந்தது என்ன?

tamil.oneindia.com - VelmuruganP : டெல்லி: ஆயுஷ் அமைச்சக கூட்டத்தில்

விடாப்பிடியாக இந்தியில் பேசியதுடன், இந்தி தெரியாத அதிகாரிகளை வெளியேற சொன்ன மத்திய ஆயுஷ் அதிகாரி ராஜேஷ் கோட்சே குறித்தும், அங்கு என்ன நடந்தது என்பது குறித்த பின்னணியையும்  இப்போது பார்ப்போம்..           ஆயுஷ் கூட்டம்...இந்தி தெரியாத மருத்துவர்கள்...கலந்து கொள்ள வேண்டாம்...செயலாளர்  அடாவடி !!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் யோகாவை கொண்டு சேர்க்கும் வகையில் யோகா படித்த சுமார் 1.25லட்சம் பேரை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.முதற்கட்டமாக 350 நியூரோபதி மற்றும் இயற்கை மருத்துவர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியல் மத்திய ஆயுஷ் அமைச்கத்தற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மாவட்டத்திற்கு ஒரு மருத்துவர் என 38 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களின் பெயர் பட்டியல் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் எதிர்ப்பு.         இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த 18ம் தேதி முதல் ஆன்லைனில் நடந்தது. இதில் நாடு முழுவதும் 350 மருத்துவர்கள் பங்கேற்றார்கள். கடைசி நாளான நேற்று ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்த பின்னர் மத்திய ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே கலந்து கொண்டு இந்தியில் பேசியிருக்கிறார். அதில் கலந்து கொண்ட தமிழக மருத்துவர்கள் எங்களுக்கு இந்தி தெரியாது, நீங்கள் பேசுவது புரியவில்லை என்று கூறியிருக்கிறார்கள். வ்வவ்வ்வ்வ் புறக்கணிக்கிறீர்களா? அத்துடன் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறை என்று உள்ள நிலையில் ராஜேஷ் கோட்சே யோகாவை மட்டும் பேசியதாகவும் இயற்கை மருத்துவத்தை பற்றி பேசவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக மருத்துவர்கள் இயற்கை மருத்துவத்தை புறக்கணிக்கிறீர்களா என்றும் கேட்டுள்ளார்கள். அத்துடன் ஆன்லைன் வகுப்பு கமெண்ட் பாக்ஸில் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.

 கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள்

இதனால் கோபம் அடைந்த அதிகாரி ராஜேஷ் கோட்சே, இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் அனைவரும் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் 6 மணிக்கு முடிய வேண்டிய கூட்டம் 4 மணிக்கே முடிந்துவிட்டது. இதனிடையே தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட மருத்துவர்களை இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று கூறிய சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கோபம் அடைந்துள்ள ராஜேஷ் கோட்சே சம்மந்தப்பட்ட அரசிடம் சொல்லி தண்டனை கிடைக்க செய்வேன் என மருத்துவர்களை மிரட்டியிருக்கிறார். 

ராஜேஷ் கோட்சே...       மத்திய ஆயுஷ் செயலர் ராஜேஷ் கோட்சேவின் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பணி காலம் முடிந்துவிட்டது. அவருக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு பணியில் வைத்துள்ளது. இதனிடையே ராஜேஷ் கோட்சேவின் செயலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் புயலை கிளப்பி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக