வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

திராவிட இயக்கங்கள் மீதும் தமிழகத்தின் மீதும் சேறு வாரி வீசுகிறார்களா ...... ஈழத்தமிழர்கள்?

Kalai Selvi : குருபரன் குமரவடிவேல் : திராவிட முன்னேற்ற கழகத்தை பாருங்கோ ! திமுகவை சொல்லிப் போட்டன் என்றதுக்காகாக கோவிக்க போறாங்க. ... தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தொடர்பாக நாங்கள் எவ்வளவு கழுவி ஊத்தினாலும் ...... 

 மேற்கண்ட வரிகளை உதிர்த்தவர் யாழ்ப்பாண பல்கலை கழக சட்ட விரிவுரையாளர் குருபரன் குமரவடிவேல் என்பவராகும். அதென்ன திமுகாவை சொல்லிப்போட்டன் என்பதற்காக கோபிக்க போகிறார்கள்? அதென்ன தமிழ்நாட்டு அரசியலை நாங்கள் எவ்வளவு கழுவி ஊத்தினாலும்? இதுதான் யாழ்ப்பாண குறுந்தேசிய ஆதிக்கம் புலிகள் வளர்த்த பாசிச கலாச்சாரம்! கொஞ்சம் கூட நன்றியோ தராதரமோ அற்ற வார்த்தைகள்..

இவர் மட்டுமல்ல அநேகமான புலம் பெயர் ஈழத்தமிழர்கள் குறிப்பாக புலி ஆதரவாளர்கள் இது போன்ற வரிகளை பொதுவெளியில் அரங்கேற்றுபவர்கள்தான்.

அது அவர்களின் கல்வி தகமை மற்றும் கடந்த கால தவறான அரசியல் பாதை போன்றவற்றின் பக்க விளைவுகள் என்று கருதி கொண்டோம்.     எவ்வளவு காலத்துக்குத்தான் தமிழகம் இந்த நன்றி கொன்றவர்கள் நய வஞ்சக பரப்புரைக்கு மௌனமாக இருப்பது?

எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதை இந்த புலி ஆதரவாளர்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த யாழ்ப்பாண புலிகளை ஒட்டு மொத்த ஈழத்தமிழர்கள் என்று நாம் கருதிவிட முடியாது.

இவர்கள் கிழக்கு மாகாண மக்களையோ மன்னர் வவுனியா போன்ற வடமாகாண மக்களையோ கூட கொஞ்சம் தள்ளியே வைத்து பழக்கப்படடவர்கள்.

இது ஒன்றும் தமிழகம் அறியாத ரகசியம் அல்ல.

எல்லாவற்றிலும் மேலாக மலையக தமிழர்களின் பிரச்சனைகள் பற்றி இந்த யாழ்ப்பாண அரசியல் கோழிக்குஞ்சுகள் மறந்து போயும் பேசியதாக தெரியவில்லை.

மலையக மக்களை இவர்கள் தமிழர்களாகவோ மக்களாகவோ கூட அங்கீகரித்ததாக தெரியவில்லை.

சிங்கள மக்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இந்த வடக்கு அரசியல்திவாதிகளிடம் கிடையாது.

தமிழகத்தில் இருக்கும் தமிழ் எம்பிக்கள் எம் எல் ஏக்களை நாம் தமிழக எம்பிக்கள் எம் எல் ஏக்கள் என்றுதான் அழைப்போம் .ஏனெனில் அவர்கள் தமிழக எம்பிக்கள் எம் எல் ஏக்களாகும்.

ஆனால் ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் கட்சிகள் இயக்கங்கள் எல்லாம் இஸ்லாமிய மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக.

இன்று தமிழ் எம்பிக்களை முஸ்லீம் எம்பிக்கள் இந்து எம்பிக்கள் அல்லது கிறிஸ்தவ எம்பிக்கள் என்று கொஞ்சம் கூட வெட்கம் இன்று கூறிக்கொள்கிறார்கள்.

ஈழத்தமிழர்களின் அரசியல் மேடையை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?

மலையக , இஸ்லாமிய , கிழக்கு மாகாண எம்பிக்கள் மொத்த எண்ணிக்கை சுமார் 41 என்று தெரிகிறது.

இந்த மொத்த எம்பிக்களும் இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைக்காக போராடக்கூடிய பெரும் வாய்ப்பு உள்ளது .

இதைக்கூட இன்னும் புரிந்து கொள்ள திராணியற்றவர்கள் இந்த யாழ்ப்பாண புலி அரசியல்வாதிகள் நீங்கள் ,

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தொடர்பாக நாங்கள் எவ்வளவுதான் கழுவி ஊத்தினாலும் என்று திருவாய் மலர்ந்தருளி உள்ளீர்கள்.

உங்கள் அரசியல் அழுக்கை விட அப்படி ஒன்றும் தமிழக அரசியல் தரம் தாழ்ந்து போய்விடவில்லை என்பதை கூறி கொள்ள்கிறோம்.

உங்களின் குறுகிய சுயநலத்தால் அடி முட் டாள்தனமான அரசியலால் உலகில் எங்குமே நடந்திருக்காத அளவு பேரழிவை சந்தித்தவர்கள் நீங்கள்.

உங்கள் அயோக்கியத்தனத்தால் முழு உலகையும் பகைத்து கொண்டீர்கள்.

உதவிக்கு வந்த அத்தனை பேரையும் ஏமாற்றினீர்கள் அல்லது போட்டு தள்ளினீர்கள்.

இன்று அதற்கான விளைவுகளை சந்தித்தும் இன்னும் திருந்த மனமில்லை உங்களுக்கு .

இன்னும் உங்களை கழிவு ஊற்ற ஏராளமான அழுக்குகள் உள்ளன .

ஆனால் நீங்கள் எங்கள் எதிரி அல்ல .. நீங்கள் தமிழர்கள்தான் என்ற உணர்வின் அடிப்படையில் இத்தோடு நிறுத்தி கொள்கிறோம்.

தமிழகத்தின் மீதோ திராவிடத்தின் மீதோ இனியும் உங்கள் அழுக்கு வார்த்தைகள் வருமானால் கண்டிப்பாக அதற்குரிய விளைவுகளும் எம்மிடம் வரும்..

உங்கள் போராட்டங்களுக்கு எல்லா உதவிகளையும் தந்து கொடும் சிறைவாசங்களை அனுபவித்து வாழ்வையே தொலைத்துவிட்ட குடும்பங்கள் ஏராளம் இங்குண்டு..

நிலைமை புரியாமல் கழுவி ஊத்துவது என்றல்லாம் இனியும் அழுக்கு வாய்களை அகல திறக்கவேண்டாம்..

உங்கள் அருகில் இருக்கும் தமிழகம் உங்களை ஏறெடுத்து பார்க்காமலே போய் விடக்கூடும் .

பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். அழிச்சாட்டியம் போதும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக