தினத்தந்தி : ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா
ராம்தேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர்
எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்.
அயோத்தி,
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு
வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும்
நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்
பகவத், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இவர்களை தவிர்த்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்-மந்திரி
கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கடியார் உள்ளிட்டோர் பா.ஜனதா சார்பில்
பங்கேற்கிறார்கள். கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி
மனோகர் ஜோஷி ஆகியோர் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம்
பங்கேற்கிறார்கள்.
இதைப்போல விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அலோக் குமார், சதாசிவ் கோக்ஜே,
தினேஷ் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா
அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். சிறப்பு அழைப்பாளராக
பாபா ராம்தேவ் கலந்து கொள்கிறார்.
இதற்கிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழாவின் அழைப்பாளர்
எண்ணிக்கையை 200-ல் இருந்து 170-ஆக குறைத்திருப்பதாக அறக்கட்டளை
நிர்வாகிகள் தெரிவித்தனர். தற்போது உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில பா.ஜனதா
தலைவர் ஸ்வாதந்தர தேவ் ஆகியோரும் பாதிக்கப்பட்டு உள்ளதால், இந்த எண்ணிக்கை
மேலும் குறைக்கப்படலாம் எனவும் அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக