திங்கள், 31 ஆகஸ்ட், 2020

அகஸ்தியா திரையரங்கம் மூட படுகிறது... வடசென்னையின் மறக்க முடியாத அரங்கம்


 R
amesh Ram
: 1.09.2020 முதல் வடசென்னையின் மிக பிரபலமான அகஸ்தியா திரையரங்கம் மூட படுகிறது 1004 பேர் உட்கார்ந்து பார்க்க கூடிய 70mm non AC திரையரங்கம் . கமல்ஹாசன் அவர்களின் படங்களை இங்கு திரையிடும் பொழுது அப்படி ஒரு திருவிழா போல் இருக்கும் . ரஜினி சார் படங்களை இங்கு திரையிட மாட்டார்கள் அதற்கு ஒரு flash back இருக்கிறது விடுதலை படம் வந்த பொழுது கட் அவுட் மீது ரசிகர் ஒருவர் ஏறி கீழே விழுந்து இறந்து விட்டார் அன்று முதல் ரஜினிகாந்த் படங்களை இங்கு வெளியிட மாட்டார்கள். மிகவும் விசாலமான திரையரங்கம் 7g படம் வரை balcony 25rs , கீழ் டிக்கெட் 10rs
கூட்டம் அப்படி வரும் புது படங்கள் வரும் பொழுது திரையரங்கம் வளாகத்தில் மக்கள் கூட்டம் வரிசையில் பெரிய லைன் நிற்கும் online ticket வசதி இ
ல்லாத காலகட்டத்தில் முந்தி கொண்டு டிக்கெட் வாங்குவது இந்த திரையரங்கில் படம் பார்த்து வளர்ந்தவர்களுக்கு தெரியும் அது ஒரு அற்புதமான அனுபவம்.

கடைசி வரை குளிர்சாதன வசதி இல்லாத இயங்கிய திரையரங்கம் மிக பெரிய திரை Box seat எல்லாம் இருக்கும்
மறக்க முடியாத பல நினைவுகள் இந்த திரையரங்கில் நடந்து இருக்கிறது.

இந்த திரையரங்கில் மிகவும் கஷ்டப்பட்டு பார்த்த படம்( பம்பாய்) அறிவிப்பு இல்லாமல் திடிரென்று படம் ரிலீஸ் ஆனதால் டிக்கெட் ரிசர்வ் செய்ய முடியாமல் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வரிசையில் நின்று எப்பா கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம் பசுமையான நினைவுகள்.

அதே போல் டிக்கெட் கிடைக்காமல் வீட்டுக்கு திரும்பி வந்த ஒரே திரைப்படம் அபூர்வ சகோதரர்கள்.

தேவி தியேட்டர் ஓனர் தான் இந்த அகஸ்தியா தியேட்டருக்கும் ஓனர்
என்ன காரணம் என்று தெரியவில்லை தியேட்டர் பராமரிப்பு முற்றிலும் நிறுத்தபட்டு ஒரு மூன்று ஆண்டுகள் கடமைக்கு ஓட்டி கொண்டு இருந்தார்கள் கடைசியாக இங்கு சென்று நான் பார்த்த படம் (அட்டு) அதன் பிறகு மெட்ரோ ரயில் வேலைகள் நடந்து கொண்டு இருந்தது அது முடிந்தவுடன் தியேட்டர் புது பொலிவு பெறும் என்று நினைத்து இருந்தேன் ஆனால் முற்றிலும் மூட படுகிறது என்ற செய்தி கேட்டவுடன் கண்கள் கலங்கி விட்டது.

இந்த தியேட்டர் அனுபவங்கள் அது நமக்கு தந்த பரவச அனுபவம் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என்று தெரியாது எவ்வளவு தான் Multiplex தியேட்டர்கள் வந்தாலும் இது போன்ற single screen தியேட்டர் தரும் அனுபவங்கள் அதிகம் வடசென்னையின் மறக்க முடியாத திரையரங்கம் அகஸ்தியா 70mm.

Cinema paradiso திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே உணர்வை ஏற்படுத்தியதற்கு காரணம் இது போன்ற திரையரங்கம் தான்.

*ரமேஷ் ராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக