திங்கள், 3 ஆகஸ்ட், 2020

விஜயலட்சுமி தர்ணா போராட்டம் நடத்த வீட்டுக்கு வெளியே வந்தார் .. - தடுத்து நிறுத்திய போலீஸ்.. வீடியோ

tamil.news18.com :   பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் ஜெயலட்சுமி தனக்கு உதவி செய்கிறேன் என தொடர்ந்து தொந்தரவு செய்வதாக விஜயலட்சுமி குற்றச்சாட்டி உள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள தனது தற்காலிக இல்லத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி வெளியே வந்த நடிகை விஜயலட்சுமிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனை தொடர்ந்து விஜயலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் ஜெயலட்சுமி தனக்கு உதவி செய்கிறேன் என தொடர்ந்து தொந்தரவு செய்கிறார். எனக்கு பா.ஜ.க வினர் யாரும் உதவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து என்னை தெரியாது என்று சொல்லும் சீமான், என்னை திருமணம் செய் வேண்டியதில்லை. ஆனால் என்னுடனான  தொடர்பை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.  சீமானுக்கும் எனக்குமான உள்ள உறவு இயக்குநர் அமீருக்கு தெரியும் அவர் ஏன் மவுனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை.தற்போது நாயும், பூனையுமாக இருக்கும் நாங்கள் சேர்ந்து வாழ்வது என்பது் சாத்தியமில்லை அதை நானும் விரும்பவில்லை பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும். அவர் மவுனம் கலைக்கும் வரை நன் தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபடுவேன். என் உடல் நலம் மிகவும் மோசமாகி வருகிறது, எதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சீமான் தான் பொறுப்பு என்றார்.
உங்கள் புகாரில் உண்மை இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பார்களே என்ற கேள்விக்கு..? அதை நீங்கள் தான் காவல்துறையிடம் கேட்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக