ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

பால் கனகராஜ் .. முன்னாள் தமிழ் ஈழ உணர்வாளர் ... இந்நாள் பாஜகவின் கட்டை பஞ்சாயத்து சங்கி

வுக்குங்கர்  :   பால் கனகராஜ் ! இவரை பற்றி நான் மிக மோசமாக
எழுதியிருக்கிறேன். பொய் அல்ல. உண்மையைத்தான். அதற்காக இன்றும் வழக்கை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். இவரை பற்றி எழுதிய பிறகு இவரை எப்படி நேரில் சந்திப்பது எவ்வளவு சங்கடமாக இருக்கும் ? எதிர்பாராவிதமாக, ஒரு வழக்கறிஞர் திருமணத்தில் இவரை நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் வந்து விட்டது. எனக்கோ வெட்கம். ஒரு அசூயை. இவர் என்னை பார்த்து, "என்னப்பா சங்கர் என்னை பத்தி இப்படி எழுதிட்ட என்று கேட்டார். எனக்கு வெட்கம். சங்கடமாக நெளிந்து "இல்ல சார் அது வந்து..." என்று இழுத்தபோது, அப்படியே அதை கடந்து, சரி அந்த மேட்டர் என்னன்னு சொல்லு என்று அவரே பேச்சை மாற்றினார்         .2008-2009ல் ஈழப்போர் குறித்து தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்தபோது இவர் ஒரு உணர்வாளராக இருந்தார். பின்னரும் இவர் உணர்வாளர்தான். பின்னர் தனியே இவர் ஒரு கட்சியை தொடங்கினார்.

இவர் பிஜேபியில் சேர்ந்தார் என்ற செய்தி அறிந்ததும் மிகவும் வருத்தம் அடைந்தேன். அச்சமும் அடைந்தேன். பால் கனகராஜ் போன்ற உணர்வாளர்களை சங்கிகள் கைப்பற்றுகிறார்கள் என்றால் இவர்களின் வீச்சு என்ன என்பதை உணர்ந்தேன்.; தமிழகத்தில் பிஜேபியினர் சம்பந்தமான எந்த காவல்துறை புகார் என்றாலும், "கட்டப் பஞ்சாயத்துக்கு" பால் கனகராஜை கூசாமல் அழைக்கிறார்கள். இவரும் கூசாமல் செல்கிறார். மேலும், பால் கனகராஜை பிஜேபியில் இணைத்ததே, தமிழகம் முழுக்க இருக்கும் ரவுடிகளை பிஜேபியில் இணைப்பதற்காகத்தான் என்று சொல்கிறார் என் ஆர்.எஸ்.எஸ் நண்பர். இருக்காது என்று நான் நினைத்த சமயத்தில், பிஜேபியில், இன்று ஆக்டீவாக இருக்கும் பல ரவுடிகள் இணைகிறார்கள். இந்த தகவலை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. உதாசீனப்படுத்தவும் முடியவில்லை.

நேற்று சென்னை, பல்லாவரத்தில் நடந்த கட்டப்பஞ்சாயத்தில் கூட பால் கனகராஜ் இருந்தார் என்ற செய்தி கேட்டு எனக்கு வருத்தமே.

பால் கனகராஜ் போன்ற நபர்களை பார்க்கையில், எனக்கு எப்போதும் தோன்றுவது ஒன்றுதான்.பிழைப்புக்காக இப்படி ஒரு இழிநிலைக்கு செல்லும் முன் நான் இறந்து விட வேண்டும் என்பதே.

வாழ்த்துக்கள் பால் கனகராஜ் சார்.

(உங்கள் செயல்பாடுகளை பொருத்து, ஆதி அந்தம் முதல் தொடர்ந்து எழுதுவேன். என்னவெல்லாம் வெளிவரும் என்பது நீங்கள் அறியாதது அல்ல)

சவுக்கு சங்கர்
8 ஆகஸ்ட் 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக