மாலைமலர் : சீன ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும்
வகையில இந்தியா வடக்கு லடாக் பகுதியில் ராணுவ பலத்தை அதிகரிக்க
தொடங்கியுள்ளது.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில்
கடந்த மாதம் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில்
20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்டோர்
காயம் அடைந்தனர்.அதன்பின் இருநாட்டு ராணுவ
கமாண்டர்கள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வெளியுறவுத்துறை
மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு ஆலோசகரும்
சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இருநாட்டு படைகளும் தங்களது
பழைய இடத்திற்கு திரும்ப ஒத்துக்கொண்டன.லடாக்
பகுதியில் சீனா 2 கி.மீட்டர் தூரத்திற்கு பின் வாங்கினாலும் மற்ற பகுதியில்
இருந்து பின் வாங்க தயங்குகின்றன. நேற்று ராணுவ கமாண்டர்கள் நிலையிலான
பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும்
மறுமுனையில் இந்தியா பொருளாதார நெருக்கடி கொடுத்து வருகிறது, மேலும்
லடாக்கின் பல பகுதிகளில் ராணுவத்தை குவித்து வருகிறது.
தற்போது கடுமையான பனிப்பொழிவு காலம். இருந்தாலும் அதற்கென விசேஷ பயிற்சி பெற்ற வீரர்களை லடாக்கில் குவித்து வருகிறது.
இந்நிலையில்
வடக்கு லடாக் பகுதிக்கு ராணுவ துருப்புகளை நகர்த்தி வருகின்றன. ராணுவ
டாங்கிகள் இன்று வடக்கு லடாக் பகுதி நோக்கி அணிவகித்து செல்வதை காண
முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக