m.dailyhunt.in : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரபல ஊடகவியலாளர் மதன்
ரவிச்சந்திரனுக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு
வழக்கு தொடர்ந்துள்ளார்.
சேனல் விஷன் யூடுப் சேனலில் மதன்
ரவிச்சந்திரன் தனது தொடர் விவாதங்கள் மூலம் திமுகவிற்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தி வந்தார், அத்துடன் தான் பணியாற்றிய ஊடகங்களில் திமுக என்னென்ன
சித்துவிளையாட்டுகளை செய்துவருகிறது என்றும் அவர்களின் நோக்கம் என்ன என்பது
குறித்தும் மதன் டைரி என்ற நிகழ்ச்சியில் தெரிவித்து வந்தார்.
இது
மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கியது, மேலும் கள்ளத்துப்பாக்கி
வழக்கில் கைதான திருப்போரூர் எம் எல் ஏ. அந்த பகுதியில் மான் வேட்டை நடத்தி
வந்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து அந்த ஊர் நபர் தெரிவித்த
கருத்துக்களை பேட்டியாக ஒளிபரப்பினார்
பேட்டியின் இறுதியில் முக்கிய
பிரமுகர் ஒருவர் மான் கரியை விரும்பி சாப்பிடுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து உதயநிதியை குறிப்பிட்டு மான்கறி
உதயநிதி என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது, இதனால்
வனத்துறை அதிகாரிகள் உதயநிதி மீது வழக்கு பதிவு செய்வார்களா என்ற விவாதம்
எழுந்தது, இந்த நிலையில் இன்று திடீர் என உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில்
மதன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தன் மீது உதயநிதி வழக்கு
தொடர்ந்தால் தான் நடத்திய விவாதம் குறித்தும் தான் பேசியது குறித்த அனைத்து
தகவலையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயார் என முன்பே மதன் தெரிவித்து
இருந்தார்,
எனவே தற்போது மான்கறி விவகாரம் நீதிமன்றத்தில் புயலை கிளப்பும் என கூறப்படுகிறது, அதே நேரத்தில் இந்த விவகாரம் மூலம் மதனை அடக்கலாம் என நினைத்த உதயநிதிக்கு எதிராக இந்த வழக்கு முடியும் எனவும் கூறப்படுகிறது.
முக்கிய பத்திரிகையாளர்கள் சொன்னதன் பேரில்தான் இந்த வழக்கையே உதயநிதி தொடர்ந்துள்ளாராம்.
©TNNEWS24
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக