ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? எம் எல் எம் கம்பனியின் இரு முதலாளிகளும் இருவேறு பாதையில்?

    Jeyapal - Samayam Tamil : அமைச்சர்கள் சுமார் 10 பேர் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஓபி எஸ் ஈ பி எஸ் :     அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் கடந்த சில நாள்களாக தமிழ்நாடு அரசியலை பரபரப்பாக்கியுள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அமைச்சர்கள் பத்து பேர் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் தற்போது எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் கடந்த சில நாள்களாக தமிழ்நாடு அரசியலை பரபரப்பாக்கியுள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அமைச்சர்கள் பத்து பேர் ஆலோசனை நடத்தினர். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்றுவருகின்றன. ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது, யார் முதல்வர் வேட்பாளர் என்பது விடை தெரியாத முக்கிய கேள்வியாக உள்ளது.



சசிகலாவை ஏற்க தயாராகும் அதிமுகவின் ‘மணி’கள்; ஆனா ஒரு கண்டிஷனாம்!

தேர்தல் முடிந்தபின்னர் எம்.எல்.ஏக்கள் ஒன்றுகூடி முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என செல்லூர் ராஜு கருத்து தெரிவித்த நிலையில் விவாதம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என வெளிப்படையாக ராஜேந்திர பாலாஜி அறிவித்ததும் இந்த விவாதம் விவகாரமாகியது. அதைத் தொடர்ந்து கடம்பூர் ராஜு, உதயகுமார், ஜெயக்குமார் என கருத்து தெரிவிக்க, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாக அறியப்படும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி கட்சி தலைமை அறிவிக்கும் என்றனர்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பேச்சு தொடர்ந்த நிலையில் எம்ஜிஆர் பாடல் வரிகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தற்போதைக்கு இந்த விவாதத்தை முடித்து வைக்க பார்த்தார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் கட்சிக்குள் இந்த விவாதம் கொதிநிலையிலேயே இருந்து வருகிறது. இதைத் தணிக்கத்தான் ஓபிஎஸ் பதிவிட்டாலும் அவருக்கு ஆதரவாக, 2021இல் பன்னீர் செல்வம்தான் முதல்வர் என்ற போஸ்டர்கள் தேனி மாவட்டத்தில் அதிகளவில் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

விரைவில் கட்சி தொடங்குகிறாரா விஜய்? எஸ்ஏசி சந்தித்த டெல்லி வழக்கறிஞர்!

அதன்பின் அவர்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஒ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவாதத்தை தொடங்கிவைத்த செல்லூர் ராஜுவும், ராஜேந்திர பாலாஜியும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் இன்று மதியம் வெவ்வேறு இடங்களில் வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இருந்தது. இந்த திடீர் ஆலோசனை காரணமாக அவை தள்ளி வைக்கப்பட்டன. தற்போது அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அதிமுக அதிகாரிகளும் ஓபிஎஸ் இல்லத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

சுமார் 1 மணியளவில் ஆலோசனைக்கூட்டத்தை முடித்துக் கொண்டு அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்து கிளம்பிச் சென்றனர். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கச் சென்றுள்ளனர்.

அதிமுகவுக்குள் புயலைக் கிளப்பியுள்ள இந்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்துக்கு தீர்வு கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதற்கு பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக