Karthick Ramasamy : · தமிழ்நாட்டில் தமிழர்கள் என்றால் மதவேறுபாடின்றி அனைவரும் தமிழர்கள்தான். இலங்கையில் இந்துக்கள் மட்டும்தான் தமிழர்கள் போல, இஸ்லாமியர்களை அவர்கள் தமிழர்களாக கருதுவதில்லை போல.
.பல இலங்கைத்தமிழர்களின் பதிவுகளில் வெளிப்படையாகவே தமிழர்கள், இஸ்லாமியர்கள் என்று பிரித்து எழுதுகிறார்கள். சரி அது எப்படியோ போகட்டும், இலங்கை அரசியலை இங்கு பேசும் முட்டாள்கள் அதே நிலைமையை இங்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள். எனக்கு விபரம் தெரிந்து தமிழ்நாட்டில் தமிழர்கள் என்றால் அது தமிழ்பேசும் அத்தனை பேரையும் மதவேறுபாடில்லாமல் உள்ளடக்கியதுதான்.
இங்கு தமிழர் கடவுள் தமிழர் மதம் என்று இந்துத்துவ புராணக் காதபாத்திரங்களையே மீண்டும் அவர்களின் அடியாட்கள் வேறு பெயர்களில் நுழைக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோமையார் வந்தபோது கிறிஸ்தவ மதத்தை ஏற்ற தமிழர்களும் இருக்கிறார்கள், ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக இஸ்லாமை ஏற்ற தமிழர்களும் இருக்கிறார்கள்.
மிகப்பெரும்பாலான தமிழர்கள் புத்த, சமண மதத்தை ஏற்றிருந்த காலமும் இருக்கிறது.
அதற்கெல்லாம் முன்பு அதாவது வேத மதம் இங்கு வருவதற்கு முன்பு உருவ வழிபாடற்ற ஆசிவக மத்த்தை பின்பற்றியிருந்த கீழடி காலமும் இருந்திருக்கிறது.
தமிழ் பேசும் திராவிட இனத்தவராகிய நாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மதத்தை பின்பற்றியிருந்திருக்கிறோம்.
இதில் தமிழர் மதம், தமிழர் கடவுள் என்கிற பெயரில் புரணாக் கதாப்பாத்திரங்களை திணிக்கப்பார்ப்பது நமது மற்ற மத சகோதரர்களை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இலங்கை பாணி அரசியலாகும்.
தமிழர்களுக்கு என்று தனித்த ஒரு மதமோ கடவுளோ கிடையாது. அனைவரையும் அரவணைக்கும் மாண்பே தமிழர்களின் குணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக