வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநிலங்கள் சீராய்வு மனு.. மஹாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மே.வங்கம்

dhinamalar : புதுடில்லி: நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் எனக்கோரி, மஹாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மே.வங்கம் மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

செப்டம்பர் முதல் வாரத்தில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஹால் டிக்கெட் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் தேர்வு நடத்துவதற்கு பா.ஜ., ஆளாத மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், தேர்வை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மஹாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மே.வங்கம் மாநிலங்கள் சார்பில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை நடத்த அனுமதி அளித்து ஆக.,17 ல் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக