இது போன்ற ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கூறி அப்ரண்டிஸ் முடித்தவர்கள் பணிமனை எதிரே தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
இன்று திமுக திருச்சி மாவட்ட செயலாளர் அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர்
ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தமிழர்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அண்டை மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வட மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் எப்படி வந்தார்கள் என்று கேள்வி கேட்டால் காவல் துறையினரும் பதில் சொல்ல முடியாமல் விழிக்கின்றனர்.
அவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டனரா என்ற கேள்விக்கும் விடையில்லை.
மருத்துவத்திற்கு செல்ல வேண்டும் என இ-பாஸ் கோரி மனு செய்தாலும், தொடர்ந்து ரிஜக்ட் என்றே வருகின்ற நிலையில் வடமாநிலத்தவர்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு எப்படி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இ-பாஸ் கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரையிலும் பதில் இல்லை…!!!
எங்கள் தமிழ்கடவுள் முருகனுக்காக பொங்கி போராட்டம் பண்ணீங்க சந்தோசம். எங்கள் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் பண்ணுவீர்களா? இல்லை கலவரம் செய்ய தோதான கடவுள் பிரச்சினைக்கு மட்டும் தான் பொங்குவோம்னு ஒத்துக்கிறீங்களா?
A Sivakumar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக