சனி, 8 ஆகஸ்ட், 2020

திருச்சி ரயில்வே பணிமனையில் 450 வடமாநிலத்தவர்க்கு பணி ஆணை! தமிழர்கள் மீண்டும் கூலிப்பணிக்கு என்ற ஆர் எஸ் எஸ் ... உபயம் அதிமுக

Kalai Selvi : திருச்சி ரயில்வே பணிமனையில் 450 வடமாநிலத்தவர்க்கு

பணிஆணை 300-க்கும் மேற்பட்ட வட நாட்டவர்களுக்கு இ-பாஸ் கொடுத்தது யார்..?     திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வட மாநிலத்தவர்கள் 300-க்கும் அதிகமானோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு இன்று வந்தனர். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் திருச்சி பொன்மலைக்குள் இத்தனை வடமாநிலத்தவர்கள் எப்படி வந்தார்கள்,..? ரயில்கள் ஓடவில்லை, பேருந்துகள் இயங்கவில்லை, இவர்களுக்கு எதனடிப்படையில் இ-பாஸ் கொடுக்கப்பட்டது போன்ற கேள்விகளோடு பொன்மலை ரயில்வே முன்னாள் ஊழியர்களின் வாரிசுகளும், கடந்த பல ஆண்டுகளாக பணிமனையில் அப்ரண்டிஸ் முடித்து விட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருப்போரும் ஆர்மரிகேட் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் திருமண கூடத்திற்கு முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.          இது போன்ற ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கூறி அப்ரண்டிஸ் முடித்தவர்கள் பணிமனை எதிரே தர்ணாவிலும் ஈடுபட்டனர். ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தமிழர்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அண்டை மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வட மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் எப்படி வந்தார்கள் என்று கேள்வி கேட்டால் காவல் துறையினரும் பதில் சொல்ல முடியாமல் விழிக்கின்றனர்.

அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனரா என்ற கேள்விக்கும் விடையில்லை.

மருத்துவத்திற்கு செல்ல வேண்டும் என இ-பாஸ் கோரி மனு செய்தாலும், தொடர்ந்து ரிஜக்ட் என்றே வருகின்ற நிலையில் வடமாநிலத்தவர்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு எப்படி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இ-பாஸ் கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரையிலும் பதில் இல்லை…!!!

எங்கள் தமிழ்கடவுள் முருகனுக்காக பொங்கி போராட்டம் பண்ணீங்க சந்தோசம்.எங்கள் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் பண்ணுவீர்களா?இல்லை கலவரம் செய்ய தோதான கடவுள் பிரச்சினைக்கு மட்டும் தான் பொங்குவோம்னு ஒத்துக்கிறீங்களா?

 
 ஆசிரியர் கருத்து :   பாஜகவின் முக்கிய கொள்கை தமிழகத்தை மீண்டும் ஒரு கல்வி அற்ற வறுமை மிக்க மாநிலமாக்குவதுதான் . நம்பினால் நம்புங்கள் . அவர்களின் ஒரே நோக்கம் தமிழகத்தை ஒரு நிரந்தர காலனி பிரதேசமாக வைத்திருப்பதுதான்.

இந்த அளவுக்கு ஆரிய பார்ப்பன பனியாக்களுக்கு தைரியம் வருவதற்கு முக்கிய காரணம் அதிமுகவின் தோற்றமும் வளர்ச்சியும்தான்

ஜெயாவின் ஊழல் மோசடிகளை பார்த்த பின்பும் .செம்பரப்பாக்க வெள்ளத்தின் பின்பு கூட அதிமுகவை ஆட்சியல் அமர்த்திய தமிழக வாக்காளர்களும் இந்த அவல நிலைக்கு காரணகர்த்தாக்கள்தான்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக