செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

உச்ச நீதிமன்றம் : ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! கலைஞர் 30 ஆண்டுகளுக்கு முன்பே செய்த சாதனை .. வீடியோ

மாலைமலர் : திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது’’ என்று கோர்ட் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக