திங்கள், 3 ஆகஸ்ட், 2020

ஆ.ராசா : 3ம் வகுப்பு , 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வைத்திருந்தால் நானே படிச்சு வழக்கறிஞராகி இருக்கமாட்டேன்...

Sivasankaran Saravanan : அண்ணன் ஆ.ராசா அவர்கள் 2ஜி வழக்கில் வாதாடியதை பார்த்து இந்தியாவின் மிகப்பிரபலமான சீனியர் வழக்கறிஞர்களே மிரண்டுபோனார்கள். சிபிஐ வழக்கறிஞர்கள் ராசாவின் வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கினார்கள். ஒரு கட்டத்தில் அவரை எதிர்கொள்ளமுடியாமல் “யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர் இந்த வழக்கில் வெற்றி பெறட்டும்” என நீதிமன்றத்திலேயே பதிவு செய்தார் சிபிஐ வழக்கறிஞர்.
ஒட்டுமொத்த நாடும் தனக்கு எதிராக திரும்புகிற அளவுக்கு சதி செய்யப்பட்ட வழக்கில் , ஆ.ராசா வாதாடிய விதத்தை வைத்துப்பார்க்கும்போது இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞர் அவர் தான் என தோன்றுகிறது.அப்படிப்பட்ட அறிவுச்சுடர் ஆ.ராசா சொல்கிறார் :
3ம் வகுப்பு , 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வைத்திருந்தால் நான் லாம் படிச்சு வழக்கறிஞராக ஆகியிருக்கமாட்டேன். நாடாளுமன்ற வாசல்படியில் கூட கால் வைத்திருக்க முடியாது.
இதுதான் யதார்த்தமான உண்மை. பள்ளிகளில் படிப்பில் சுமாராக இருந்த பலர் கல்லூரியில் சேர்ந்து ஒரு கட்டத்திற்கு பிறகு மிகச்சிறந்த திறன்மிக்கவர்களாக மாறுவதை நாம் ஒவ்வொருவரும் நமக்கு நன்கு தெரிந்தவர்களை வைத்தே கண்டிருக்கிறோம். என்னுடன் பள்ளியில் படித்தபோது ஒரு English poem ஐக்கூட spelling தெரியாமல் எழுத சிரமப்பட்ட , ப்ளஸ் டூ வில் தோல்வியடைந்த அந்த நபர் தற்போது MBA படித்து தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான கம்பெனி ஒன்றில் விற்பனைப்பிரிவு மேலாளராக இருக்கிறார்.
நுனிநாக்கில் அவர் பேசும் ஆங்கில உச்சரிப்பைக்கண்டு அசந்துபோனேன். இதுபோல உங்கள் எல்லாருக்குமே பள்ளியில் படித்ததற்கும் தற்போது இருப்பதற்கும் நிறைய ஆச்சரியங்களைத்தரும் நபர்கள் இருப்பார்கள்.

ஒருவரது தகுதிகளையும் திறமைகளையும் வளர்ப்பது தான் பள்ளிகளின் கடமை. உனக்கு தகுதியில்லை என ஒதுக்குவதல்ல. பள்ளிப்படிப்பில் சுமாராக கூட படிக்காத பலர் பிற்பாடு மிகச்சிறந்த கல்விப்புலமை பெறுவதுண்டு. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை என்பது பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களை உளவியல் ரீதியாக தாக்கப்போகிறது. ஒரு சில விளைவுகளை எச்சரிக்கையாக சொல்லும்போது புரியாது. நடக்கும்போது அது மோசமான விளைவாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக