ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

தமிழ்நாட்டில் இ-பாஸ் முறை ரத்து, பல புதிய தளர்வுகள் - 20 முக்கிய தகவல்கள். BBC

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் தமிழ் நாட்டிற்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொது மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், அவசர தேவைகளுக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணிக்க இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.எனினும் மாவட்டங்களுக்கு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஆட்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்தவிதமான அனுமதியும் தேவை இல்லை என்று இந்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் வேறு என்னென்ன தளர்வுகள்?<அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் விரைவில் வெளியிடப்படும் இதன்மூலம் ஒரு நாளுக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்தில் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மாவட்டத்திற்கு உள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தும் சென்னை பெருநகர பேருந்து போக்குவரத்தும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தும் செப்டம்பர் 7ம் தேதி முதல் அனுமதிக்கப்படும்.

    • வணிக வளாகங்கள் ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் மத்திய அரசின் குளிர்சாதன வசதி கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மற்றும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படும்.
    • வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்குவதற்கான தடை தொடரும்.
    • சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
    • உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இரவு 9 மணி வரை வாங்கலாம்.
    • தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக