திங்கள், 10 ஆகஸ்ட், 2020

சாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான எஸ் எஸ் ஐ பால் துரை கொரோனாவால் உயிரிழப்பு

 தினத்தந்தி : சாத்தான்குளத்தில் தந்தை – மகன் போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 10 காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கு கடந்த மாதம் 24-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக