வியாழன், 9 ஜூலை, 2020

ட்விட்டர் வாக்கெடுப்பில் News 7 செய்த தில்லுமுல்லு

Zen Selvaa  : சமீபத்தில் தான் மறு உத்தரவு வரும் வரை நியூஸ் 7 விவாதத்தில் திமுகவினர் பங்கு பெற வேண்டாம என்று திமுக தலைமை அறிவித்திருந்தது, காரணம் நிகழ்ச்சி ஒன்றின் ட்விட்டர் வாக்கெடுப்பு முடிவுகளை அதிமுகவுக்கு சாதகமாக மாற்றி வெளியிட்டதால்.
தந்தி டிவியைப் பற்றி சொல்லவே வேண்டாம், சும்மா இருக்கும் போது கூட அண்ணா சிலையின் தலையில் கொரோனாவை காரட்டூனாக வரைந்து திமுகவை சீண்டும். ஏற்கனவே பலமுறை தந்தி டிவியின் ஒருதலைப்பட்சமான போக்கால், விவாதங்களில் திமுகவினர் பங்குபெற மாட்டார்கள் என்று அறிவித்திருககிறார்கள். புதிய தலைமுறையும் அப்படியே, தவறு செய்தவர் அதிமுக அமைச்சர் என்றால் அரசியல் பிரமுகர் என்று சொல்வதும், அதுவே திமுகவில் சாதாரண நபராக இருந்தாலும், திமுக பிரமுகர் என்று செய்தி வெளியிடுவதும் வாடிக்கை.
நியூஸ் 18 டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஊடகம் என்பதால் தமிழகத்தின் எந்தக் கட்சிக்கும் முன்னுரிமையோ, முக்கியத்துவமோ கொடுக்காமல் தங்களுக்கு சரியென மனதில் பட்டதை செய்கிறது.
மேலும், இவர்கள் விவாதத்திற்கு அழைப்பவர்களின் பட்டியலில் மாலன், நாராயணன் முதல் பத்ரி சேஷாத்ரி, கோலாகல சீனிவாசன், ராமசுப்பிரமணியம், பானு கோம்ஸ், சுமந்த் ராமன், பட்டம் வெங்கடேஷ், ஆடிட்டர் சத்திய குமார் போன்ற எண்ணற்ற பிஜேபி ஆதரவு " குறிப்பிட்ட சமூக?" ஆர்வலர்கள் முதலிடத்தில் இருப்பார்கள்.. இவர்களுக்குத் தான் பேச அதிக நேரம் கொடுப்பார்கள்...

இப்படி தமிழகத்தின் பெரும்பாலான முன்னணி செய்தி ஊடகங்கள் அனைத்தும் திமுகவுக்கு எதிரான மனநிலையிலேயே செயல்படுகிறது என்பதை சாதாரண பாமரனும் அறிவான்.
அதேநேரத்தில் பாண்டே தந்தி டிவியில் பிஜேபியின் சொம்பாக ஆக இருந்தது, தினமணி தினமலர் போன்றவை பிஜேபியின் ஜால்ராக்ளாக இருப்பது, இத்தனைக்கும் தினமலரின் ஆசிரியர் பிஜேபி மத்திய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்..
ஆனால் எதை வைத்து, அனைத்து ஊடகங்களும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக இந்த அரைவேக்காட்டு சங்கி கும்பல்கள் சொல்கிறன என்று புரியவில்லை.
ஒருவேளை, பாஜகவுக்கு எதிராக செயல்படுவதையே திமுகவுக்கான ஆதரவு என நினைக்கிறார்களோ என்னவோ......?
எப்படியோ, திமுகவுக்கு எதிராக இருப்பவர்களையும் ஆதரவாளர்களாக மாற்றினால் சரி தான்.....!
With Zen Selvaa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக