Yuvan Swang : மதுரை அரசு விவசாயக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்ற திருவண்ணாமலை அருந்ததியர் மாணவி பவானி படுகொலை!
குற்றவாளிகளை வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்துகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு வட்டத்திற்குட்பட்ட சே. ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி கோவிந்தன் - மலர் தம்பதியின் இளைய மகள் பவானி (19/2020). அருந்ததியர் சாதியைச் சேர்ந்த பவானி மதுரையில் உள்ள சமுதாய அறிவியல் கல்லூரி (ம) ஆராய்ச்சி நிலையத்தில், கல்லூரியில் உள்ள காவேரி இல்லம் என்கிற மகளிர் விடுதியில் தங்கி நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு பி.எஸ்.சி படித்து வந்தார்.
அருந்ததியர் மாணவி பவானி தங்கியிருந்த விடுதியில் அவருடன் தங்கியிருந்த வன்னியர் சாதியைச் சேர்ந்த ரமா உள்ளிட்ட 05 நபர்கள் மாணவி பவானியிடம் "நீயெல்லாம் எங்களுடன் தங்கியிருக்கக்கூடாது" என்று சாதியை சொல்லி திட்டி கொடுமை படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டமல்லாமல், உணவு அருந்தும்போதும் இரவு தூங்கும்போதும் தனியாக ஒதுக்கி வைப்பதும், குடி தண்ணீரை தனியான பாத்திரத்தில் குடிக்க வைப்பதும் என தொடர்ந்து சாதிய ரீதியாக துன்புறுத்தி வந்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து மாணவி பவானி தனது பெற்றோரிடம் தொலைபேசி மூலமாக நடந்ததை கூறி அழுதிருக்கிறார். மாணவி பவானியை சமாதானப்படுத்திய அவரது பெற்றோர், படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.
நடந்த சம்பவம் குறித்து மாணவி பவானி தனது விடுதி காப்பாளரிடம் கூறியதையடுத்து, விடுதி காப்பாளரும் அந்த மாணவிகளை கண்டித்துள்ளார்.
இந்த சம்பவம் விடுதி காப்பாளர் மூலமாக மாணவி பவானியின் துறை தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. துறை தலைவர் மாணவி பவானிக்கு ஆறுதல் கூறுவது போல தொடர்ந்து மாணவியின் வாட்ஸாப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் இருந்திருக்கிறார்.
இந்நிலையில், மாணவி பவானி ரெக்கார்டு ஒர்க் மற்றும் புராஜெக்ட் ஒர்க் சமர்ப்பிப்பதற்காக துறை தலைவரின் அறைக்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் மாணவி பவானியின் கன்னத்தை கிள்ளிக்கொண்டு "உன் கன்னம் கொழு கொழுவென இருக்கிறது" என்று கூறிக்கொண்டு, மாணவி பவானியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். மாணவி பவானி துறை தலைவரை திட்டிவிட்டு அழுதுகொண்டே துறை தலைவரின் அறையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். மாணவியின் பின்னாலே வந்த துறை தலைவர், "தயவு செய்து இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லிவிடாதே" என்று அழாத குறையாக மாணவியிடம் கெஞ்சியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பவானி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். மாணவி பவானியின் பெற்றோர் மகளுக்கு ஆறுதல்கூறி, இந்த ஆண்டு மட்டும் விடுதியில் தங்கிப்படி; அடுத்த ஆண்டு வெளியில் வீடு எடுத்து தருகிறோம் என்று சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், துறை தலைவர் மணவி பவானியை பார்க்கும் போதெல்லாம் "வெளியில் சொன்னால் அவ்வளவு தான்" என்று தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 11.01.2020 அன்று மாணவி பவானி தனது சொந்த ஊரான திருவண்ணாமலை செல்வதற்கு தயாராகியிருக்கிறார். அந்த நேரத்தில் துறை தலைவர் மற்றும் விடுதி காப்பாளர் ஆகிய இருவரும் மாணவி பவானியை அவருடன் தங்கியிருந்த மற்ற மாணவிகளுடன் சமாதானப்படுத்தியுள்ளனர். அதனை மாணவி பவானியும் உண்மையென நம்பியுள்ளார்.
அப்போது மாணவி பவானியுடன் விடுதியில் தங்கியிருந்த திருக்கோவிலுரை சேர்ந்த வன்னியர் சாதி மாணவி ரமா, மாணவி பவானிக்கு ஒரு டிபன் பாக்சில் மதிய உணவு கொடுத்து, இதை இடையில் எங்கும் சாப்பிடாதே உன் ஊருக்கு போய் சாப்பிடு என்று கூறியிருக்கிறார். மாணவி பவானியும் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இறங்கி தனது தந்தைக்கு போன் செய்துவிட்டு, டிபன் பாக்சில் உள்ள உணவை சாப்பிட்டுள்ளார். தனது தந்தை திருவண்ணாமலை பேருந்து நிலையம் வந்த பிறகு வயிற்றுவலி, மயக்கம் என தனது தந்தையிடம் கூறியிருக்கிறார்.
மாணவி பவானியின் உடல்நிலை மிகவும் மோசமடையவே, கடந்த 19.01.2020 அன்று மாணவி பவானியை தாணிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கும் எந்த முன்னேற்றமும் இல்லையெனவே, 22.01.2020 அன்று மாணவி பவானியை திருவண்ணாமலை அரசு மருத்துவனையில் சேர்த்திருக்கிறார்கள். அப்போது மாணவி பவானி வன்னியர் பெண் ரமா தான் எனக்கு உணவில் வைத்து எதையோ கொடுத்து விட்டாள் என்றும், கல்லூரியில் நடந்த அனைத்து உண்மைகளையும் தனது பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதிருக்கிறார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்த அன்றே இரவு சுமார் 10.00 மணிக்கு மாணவி பவானி இறந்து விட்டதாக மருத்துவர்கள், அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து, தாணிப்பாடி காவல் நிலைய குற்ற எண்: 39/2020-ல் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
துறை தலைவர் மாணவி பவானியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது குறித்தும், மாணவி பவானியுடன் விடுதி அறையில் தங்கியிருந்த மாணவி ரமா மற்றும் அவரது நண்பர்கள் மாணவி பவானியை சாதிய ரீதியாக துன்புறுத்தியதையும் மாணவி பவானி வெளியில் கூறிவிடக்கூடாது என்கிற நோக்கத்தோடு துறை தலைவர், விடுதி காப்பாளர், வன்னியர் சாதி மாணவி ரமா ஆகியோர் திட்டமிட்டே அருந்ததியர் மாணவி பவானியை திட்டமிட்டே கொலை செய்திருக்கிறார்கள்.
ஆகவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு, அருந்ததியர் மாணவி பவானியை படுகொலை செய்த துறை தலைவர், விடுதி காப்பாளர், வன்னியர் சாதி மாணவி ரமா உள்ளிட்டோர் மீது கொலை மற்றும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திடுமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.../

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக