சனி, 25 ஜூலை, 2020

ஆர் எஸ் எஸ் இன் அமைதி வேஷம் அப்துல் கலாம்.. குஜராத் கொலைகளால் குடியரசு தலைவர் ஆனவர்

Balamurugan S : வணக்கம் தம்பி, எப்படி இருக்கீங்க? என்ன படிச்சிருக்கீங்க?
வணக்கம்....கோவையில் உள்ள பிரபல கல்லூரில பொறியியல் படிச்சேன்...
ஓ...எப்படி சீட்டு கிடைச்சிச்சு?
என்னோட... கட்ஆஃப்க்கே கிடைச்சிடுச்சு...
வெரி குட்...பி.சி கட் ஆஃப்....தான!!!அப்புறம் மேல் படிப்பு என்ன படிச்சீங்க?
ஆமா!!! பி.சி கட்ஆஃப்....அப்புறம் ஐஐஎம் லக்னோல மேலாண்மை படிச்சேன்...
ஓ...ஐஐஎம் ஆ!!!! அங்க எப்படி சீட் கிடைச்சிச்சு தம்பி?
Yeah....coaching...hard work....
சரி...தம்பி அதுல எதும் கோட்டா இருந்ததா???
நான் OBC ....So........அப்படியே...
ரொம்ப நல்லது தம்பி... வேலைக்கு எப்படி சேர்ந்தீங்க...!!
Civil services exam எழுதுனேன்... ஐபிஎஸ் என்னோட Passion.... So....
மெயின்ஸ்....இன்டெர்வியூ நல்ல ஸ்கோர்....
இதுல எதுவும் கோட்டா தம்பி!!!
ஒபிசி...ங்க...
ஓ....சரி...தம்பி...மகிழ்ச்சி....ஏன் தம்பி இன்னும் சில கேள்விகள்....கேட்கலாமா?
கேளுங்க..
கோவைல பொறியியல் படிச்சீங்களே.... அந்த பிசி இட ஒதுக்கீடு யாரு கொடுத்தாங்க? அது.....19.....70's ல
அது....திமுக ஆட்சில தலைவர் கலைஞர் கொடுத்தது தம்பி...1975....சரிங்களா... அப்புறம் ஐஐஎம் ல மேனஜ்மெண்ட் படிச்சீங்களே அதுக்கு இட ஒதுக்கீடு எப்ப கொடுத்தாங்க?
அது 2006 Central educational institution reservation act....
அது யாரு ஆட்சில கொடுத்தது?

That time.... மன்மோகன் சிங் was the P.M...

Correct தம்பி... திமுக தலைவர் அதை அப்போது பிரதமரிடம் வலியுறுத்தியத மறந்திராதீங்க!!!
அப்புறம் நீங்க படிச்சு வாங்குன ஐபிஎஸ்....ஒபிசி ரிசர்வேஷன் தான....அது எப்போ யாரு கொடுத்தாங்க?

அது During VP Singh tenure....1990...

ஆமா தம்பி, பத்து வருசமா கெடப்புல போட்ட மண்டல் கமிசன் அறிக்கைய அமல்படுத்த வலியுறுத்தியவர் தலைவர் கலைஞர்... இன்னொரு விசயம் தம்பி... பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு...அதாவது....உங்களுக்கு இந்த 27% இட ஒதுக்கீட்டை கொடுத்ததுக்காக விபிசிங் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்த்தது பாஜக தெரியுங்களா தம்பி....

Hmmm....no idea...

சரி தம்பி... ஐபிஎஸ் ராஜினாமா பண்ணிட்டு....நீங்க இப்ப யாருக்கு வேலை செய்றீங்க?

"நல்லோர் வட்டம்"ன்னு ஒரு என்ஜிஒ ஆரம்பிச்சு இளைஞர்களை முன்னேத்த போறேன்...

அது வெளில சொல்றதுல...நீங்க அமித்ஷாவை சந்திச்சு, கர்நாடகல உள்ள ஆர்எஸ்எஸ் தலைவர்கள சந்திச்சு....உங்க வேலைய தொடங்கீருக்கீங்களே.....

That's ridiculous ....

இருக்கட்டும் தம்பி...இப்ப யோசிங்க தம்பி...நீங்க படிச்ச பி.இ....ஐஐஎம்ல மேனஜ்மெண்ட்...ஐபிஎஸ் என்று எல்லாவற்றுக்கும் இட ஒதுக்கீடு வாங்கி போராடிய தலைவர்கள மறந்துட்டீங்க...அவங்கள ஆதரிங்கன்னு சொல்லல...ஆனா நீங்க சந்திச்ச ஆர்எஸ்எஸ் தலைவர்கள், அமித்ஷா.. யாராவது நீங்க முன்னேறுனதுக்கு காரணமான இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்திருக்காங்களா?

Hmmm.....

அவங்க எல்லோருமே அத மொடக்குறதக்கான வேலய செஞ்சிட்டுறுக்காங்க... நீங்களும் அதுக்கு வேலை செய்யறீங்க... அதான...

See....நான்...வந்து...

தம்பி...நீங்க ஏறி வந்துட்டு... உங்கள மாதிரியே... மத்தவங்க ஏறி வர்ற ஏணிய எட்டி உதைக்கிற வேலைய செய்றீங்க... இது தப்பில்லையா!!!!

ஹலோ....நான் அப்துல்கலாம் பேர்ல இளைஞர்கள....

தம்பி...தம்பி....கோத்ரா பிரச்சனைய மறைக்க பாஜக அப்துல் கலாமை பயன்படுத்துச்சு... நீங்க தமிழ்நாட்டுல அவங்களுக்கு வேல செய்யறத மறைக்க கலாம் பேர பயன்படுத்திருங்க!!!! அவ்வளவுதான்....இதுக்கு நீங்க வெட்கப்படனும்...தம்பி

இயற்கை வலிமையானது தம்பி... வரலாறு நெடுக அதத்தான் சொல்லுது...

அன்புடன்
திராவிடதமிழன்
பாலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக