ஞாயிறு, 26 ஜூலை, 2020

தப்புமா சமூக நீதி? - ஜெ.ஜெயரஞ்சன்

மின்னம்பலம் : கொரோனா ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார பாதிப்புகள், புலம்பெயர் தொழிலாளர் விவகாரம், மக்களின் அவதி குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார். தனக்கு வந்த வாசகர்களின் மின்னஞ்சல் குறித்து இன்று (ஜூலை 26) நெகிழ்ச்சியுடன் பேசிய ஜெயரஞ்சன், எத்தனை நாள் இடஒதுக்கீடு தாக்குப்பிடிக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விரிவாக பதிலளித்தார். அவ்வளவு சுலபமாக இடஒதுக்கீட்டை விட்டுக்கொடுத்துவிட மாட்டோம், இந்த போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்று கூறினார். இடஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை பற்றியும் ஜெயரஞ்சன் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக