புதன், 1 ஜூலை, 2020

உத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக்க வந்த பெண்ணுக்கு .. வீடியோ


Hemavandhana - tamil.oneindia.com : லக்னோ: ஒரு பெண் தனக்கு பிரச்சனை என்று புகார் தர ஸ்டேஷனுக்கு வந்தால், அந்த பெண்ணை முன்னாடி நிற்க வைத்து கொண்டே சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளார் ஒரு போலீஸ்காரர்! உத்தர பிரதேசத்தில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம் கொடூரங்கள்.. கொடுமைகள்.. தினுசு தினுசாக சேட்டைகள் என பெருகி பெருகி வருகிறது. இங்கு டியொரியா என்ற மாவட்டத்தில் ரொம்ப கேவலமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.. பாட்னா என்ற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்துள்ளது.. அதனால் பாட்னா ஸ்டேஷனுக்கு இந்த விவகாரம் தொடர்பாக புகார் தர சென்றார். அப்போது ஸ்டேஷனில் பீஷ்ம் பால் சிங் என்ற போலீஸ்காரர் இருந்தார்..
பெண்ணிடம் புகாரை பெற்று கொண்டு, தனது அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து கொண்டு நின்றிருக்கிறார்.. பிறகு சுய இன்பம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்< இதை பார்த்ததும் அந்த பெண் தனது கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கிளம்பி சென்றுவிட்டார்..

 ஆனால் புகார் தொடர்பாக ஒவ்வொரு முறை ஸ்டேஷனுக்கு அந்த பெண் வரும்போதெல்லாம் பால் சிங் இப்படித்தான் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார்.. இதனால் எரிச்சல் அடைந்த அந்த பெண், ஒருநாள் ஸ்டேஷனுக்கு சென்றபோது, பால்சிங் செய்த ஆபாச சேட்டைகளை தன்னுடைய செல்போனில் வீடியோவாக ரிக்கார்ட் செய்து கொண்டார்.
நேராக டியோரியா மாவட்ட எஸ்பியிடம் போய் அந்த ஆபாச வீடியோவை தந்துவிட்டார்.. அத்துடன் ஒரு புகாரையும் தந்தார்.. அந்த ஆதாரம், புகாரின் அடிப்படையில், பால் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், அவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் எஸ்பி... ஒரு போலீஸ்காரரின் இந்த செயல் டியொரியா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக